பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

13


அந்த நேரத்தில் பள்ளி விடுமுறைக் காலம் வந்தது. ஹாரோவுக்குச் சென்று தனது தாயுடனும், அண்ணனுடன் தங்கினாள் அன்னி. விடுமுறை கழிந்த்தும் மேரிடயட்டிடம் வந்த போது மேரியட் அப்போது பாரிஸ் நகரில் தங்கி இருந்தார். அன்னியும் அவருடன் பாரிசில் தங்கினார்.


கல்வி கற்ற நேரம் போக, மிகுதியான நேரத்தில் பாரிசில் வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களை எல்லாம் மேரியட்டுடன் சென்று அன்னியும் கண்டார். கலைக் கூடங்கள், மாதா கோயில்கள், சோலைகள் போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்றார்கள்.


இதனால் குழந்தைகள் உலக அறிவு, வரலாற்று அறிவு பெற்றார்கள். இவ்வாறு ஏழு மாதங்கள் பாரிஸ் நகரத்தையும், வேறு சில இடங்களையும் பார்த்துவிட்டு, மீண்டும் லண்டன் மாநகரம் திரும்பினார்கள்.


ஏட்டுக் கல்வி மட்டுமே ஒரு குழந்தைக்கு அறிவு வளர்ச்சியை ஊட்டிவிடாது என்பது மேரியட் கருத்து. உடற்பயிற்சியிலும், உள்ளத்தின் வளர்ச்சியிலும் குழந்தைகளுக்கு கவனமளிக்கும் பயிற்சிகளைப் பெறச் செய்தல் வேண்டும். அதற்கான உதவிகளை மேரியட் குழந்தைகளுக்குச் செய்தார்.


குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து உடலுறம் பெறவும், குதிரைச் சவாரி செய்யவும், நிலா விருந்துகளுக்கு ஏற்பாடுகள் செய்தும் குழந்தைகளை மகிழச் செய்தார். இதனால் குழந்தைகள் குறையே இல்லாமல் கல்வி கற்றார்கள். இத்தகைய கல்வியை அன்னி பெற்றது. அவளது நல்ல நேரமே என்று அவள் தாயார் எமிலி அடிக்கடி கர்த்தரிடம் முறையிட்டுக் கூறுவார்.


அதே நேரத்தில் மிஸ் மேரியட் இடத்தில் மிகவும் கராறான சம்பவங்களும் உண்டு. அந்த கண்டிப்பு மத