பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அன்னி பெசண்ட் அம்மையாரின்

விவகாரங்களில் மட்டும்தான்; பிற அனைத்திலும் சர்வ சாதாரணமாகவே பழகுவார்.


கிறிஸ்துவத்தில் மேரியட் மிகவும் ஆழ்ந்த பற்றுடையவர்; அவர் எப்படியோ இறை விஷயத்தில், அப்படியே அவரைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அந்த அம்மையார் இறை ஒழுக்கம் என்னவோ, அதே சீலங்களே அன்னிக்கும், அண்ணன் மகளுக்கும் போதித்தார்.


வேறு என்ன கண்டிப்பு: காலை மாலை மாதா கோயில் தொழுகைக்குப்போக வேண்டும்: கணிந்துருகிக் கர்த்தரைத் தொழல் வேண்டும். இவற்றில் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதுதான் மேரியட்டின் கராரும். கண்டிப்புமாகும். இது கூடவா ஒழுகக்கூடாது?


விளையும் பயிர் முளையிலே என்பார்களே, அதனை போல மேரியட் போட்ட இறைவிதைதான் அன்னிக்குள் உருவான மதப்பற்றும், இயேசுநாதர் அன்பும் என்றால் மிகையாகா.


குழந்தைகள் ஒவ்வொன்றும் சுயமாக வாழ்வதற்குப் பயிற்சி பெறல் வேண்டும் என்பது மேரியட் கருத்து. அதற்குரிய பயிற்சிகளையும் அன்னி பெற்றார். இந்த பயிற்சியின் விடா முயற்சிதான் பிற்காலத்தில் அன்னிக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல; போதிய தைரியத்தையும் தாராளமாகக் கொடுத்தது எனலாம்.


பதினாறு வயது முடிந்த பாவையானாள் அன்னி; வீடு திரும்பும் நேரமும் வந்தது: கல்விப் பயிற்சியும் முடிந்தது: அப்போது மேரியட் அன்னியிடம்:


"அன்னி குழந்தையாக என்னுடின் வந்தாய் இப்போது பதினாறு வயது பெண்ணாகப் போகிறாய்! என்