பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

23


அந்த ஆண் குழந்தைக்கு ஆர்தர்டிக்பை பெசண்ட் என்று பெயரிடப்பட்டது. இக் குழந்தை அன்னியின் மனச்சுமையை ஓரளவு குறைத்தாலும், அந்தப் பிரசவத்தால் அவளது உடல் மிகவும் பலவீனமானது: இந்த நிலையில் வீட்டு வேலைகளும் அதிகரித்து விட்டன! அனைத்தையும் அவளே செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாள்!


அந்த பலவீனமான உடல் நிலையிலேயே, அடுத்த ஆண்டில் ஒரு பெண் குழந்தையை அன்னி ஈன்றாள். அக் குழந்தையின் பெயர் மேயல் எமிலி. இவர் தாயாரை இப்படிப்பட்ட கணவன் எதிரில் அழைத்து வைத்துக் கொள்ள விரும்பாத அன்னி பெசண்ட், இரு குழந்தைகள் வேலைகளையும், வழக்கம் போல வீட்டுக்குரிய பணிகளையும் அவளே செய்து மிகவும் நொந்து கொண்டிருந்தாள்!


அதே நேரத்தில் அவளது தாயார் எமிலிச்கு நம்பிச்கையான ஒரு வழக்குரைஞர், அந்த அம்மையாரை ஏமாற்றி இருக்கும் பணத்தைப் பறித்துச் சென்று விட்டான்! அதனால் எமிலி கடன் சிக்கலிலே மாட்டிக் கொண்டு மகளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்ய முடியவில்லை.


குடியிருந்த வீட்டையும் எமிலி விற்று விட்டார்! மகன் ஹாரியிடமே சென்றுவிட்டார். மகன் தாயை அன்புடன் இருக்கச் செய்த்போதும்கூட, மகள் கவலையே எமிலிக்கு பெருத்த வேதனையைத் தந்துவிட்டது.


இந்த நிலையில் அன்னி பெசண்டின் இரண்டாவது பெண் குழந்தைக்கு மூச்சுக் குழாயில் சளி அடைப்பு: இந்த நிலையிலே அதற்குக் கக்குவான் நோய் இருமி இருமி இளைத்ததுடன் மட்டுமல்ல; பிழைக்குமா அது என்ற சந்தேக நிலையும் ஏற்பட்டுவிட்டது.


குழந்தை படும் வேதனையைக் கண்டு கண்ணிர் விட்டவாறே, இறக்கும் போதாவது அக் குழந்தை நிம்மதியாகச்