உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61

யும்-நடிப்பும் நாட்டில் இவ்வளவு எழுச்சியை உண்டு பண்ணின என்றால், நீங்கள் உண்மையில் நின்று கிளர்ச்சி செய்தால், சிறையில் புகுந்தால்-அவை எவ்வளவு எழுச்சியை உண்டு பண்ணி இருக்கும்?"

"ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள்? உண்மையை மனதில் கொண்டு களத்துக்கு வாருங்கள்; கிளர்ச்சி செய்யுங்கள் சிறைக்குச் செல்லுங்கள்; வீண் பேச்சு எதற்கு?

"பெசண்ட் அம்யைார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா? தீமை விளைகிறதா? என்று பார்த்தேன். நலம் விளைதல் கண்டேன்; துணை போகிறேன்; நாளைத் தீமை விளைவதைக் கண்டால் அவரது கிளர்ச்சிக்குத் துணை போகேன்; இதை ஒரு நொடியில் சாய்க்க முயல்வேன் என்று முழக்கமிட்டார்.

'திலகர் பெருமான், அன்னி பெசண்ட் அம்மையாரின் இந்திய சுதந்திர போராட்ட உணர்ச்சியை உண்மையே என்று மதித்தார்! மரியாதை தந்தார்! அதைப் பாராட்டினார்: அன்னி பெசண்ட் எதிரிகள் மீது கோபம் கொள்ளமல் நீயும் வா களத்துக்கு; போராடு; சிறை போ! என்று அவரது பொறாமை உள்ளத்துக்கு உரிய வழியைக் காட்டி அழைத்தப் பண்பாளராக விளங்கினார்! இதுவன்றோ அரசியல் தலைமைக்கு அழகு!

அன்னி பெசண்ட் வடநாடு சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், திலகர் போன்றவர்கள் அப்போது உடன் இருந்தார்கள்.

அமிர்தசரஸ் நகர் தேசிய மகாசபைக் கூட்டம் முடித்த பின்பு, அன்னி பெசண்ட் சென்னை வந்தார். அவரை வரவேற்று திரு.வி.க. ஊர்வலமாக அழைத்துச் செல்ல முயன்றபோது; அம்முயற்சியை கப்பலோட்டிய சிதம்பரமும், அவர் சார்பாளரும் தடுத்தார்கள்.