பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அன்னி பெசண்ட் அம்மையாரின்


அன்னி பெசண்ட் நடத்தி வந்த 'க்திய இந்தியா தி காமன்வீல்' என்ற ஏடுகளிலும் காந்தியின் கொள்கைகளை எதிர்த்தே எழுதி வந்தார்.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையிலே மட்டும் தொடர்ந்து வலியுறுத்தியும்-வற்புறுத்தியும் எழுதிக் கொண்டே வந்தார்.

இங்கிலாந்து நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும் போது எல்லாம் அது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவார்! வாதாடுவார்! தயக்கமே காட்டமாட்டார்!

என்றாவது ஒரு நாள் இந்தியா சுதந்திரம் பெறும் என்று அன்னி பெசண்ட் உறுதியாக நம்பினார்; என்றாலும், அந்த காந்தி எதிர்ப்பு சம்பவத்திற்குப் பிறகு, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அரசியல் பற்றுக் குறைந்தது! இப்போது பிரும்மஞான சபை பணிகளிலே தீவிரமாகக் கவனம் செலுத்தினார்: இடைவிடாத உழைப்பு; அவற்றிலே எதிர்ப்பு: மீண்டும் களைப்பு! மறுபடியும் சிலிர்ப்பு!

இவ்வாறு மாறிமாறித் தொண்டாற்றும்நிலை ஆரம்ப முதல் அன்று வரை இருந்து கொண்டே வந்ததால் அவர் மூப்பு தொடர்ந்து பணியாற்றத் தடையிட்டது.

தனது வாழ் நாளின் இறுதிக் காலத்தைக் காசியிலே கழித்து, அங்கேயே மாண்டு போகலாம் என்ற ஆசை அவருக்கு இருந்தது. நினைப்பதெல்லாம் நடந்தா விடுகின்றது?