நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
23
குடியிருக்கத் தனி வீடு கிடைத்து விட்டதால், இனி சுகமாகத் தனிக் குடித்தனம் நடத்தலாம் என்று கணவர் காந்தியுடனும் பிள்ளைகளுடனும் கஸ்தூரிபாய் குடும்பத்தைக் கவனித்து வந்தார்.
நேட்டால் இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தினந்தோறும் காந்தியின் வீட்டிற்கு வருவதும், இரவு பகலாக அவரது இல்லத்தில் தங்குவதும் அதிகமானதால், அவர்களுக்குரிய உணவு வகைகளைச் சமைத்துப் போட்டுப் பரிமாறும் பணிகள் கஸ்தூரிபாய்க்கு அதிகரித்து விட்டன.
மருத்துவ மனைகளில் உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெறும் இந்தியர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் உணவு சமைத்துப் போடும் பணிகள் நாளுக்கு நாள் கஸ்தூரிபாய்க்கு பெருகிவந்தன.
தொழு நோயாளிகளைக் காந்தி தனது வீட்டுக்கே அழைத்து அவர்களையும் அதே வீட்டில் தங்கும்படி செய்வார். அவர்களது புண்களைத் தினந்தோறும் கழுவி சுத்தம் செய்து மருந்து போடுவார் காந்தி. கஸ்தூரி பாயும் அவருடன் சேர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய கஸ்தூரிபாய் முகம் சுளித்தால், அருவருப்புக் காட்டினால் காந்தி தனது மனைவியிடம் எரிந்து விழுவார். வாயில் வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பிப்பார்:
வருவோர் போவோருக்குச் சமைத்துப் போடவும், அவர்களுக்குரிய பணிகளைச் செய்யவும் கஸ்தூரி பாயினால் முடியவில்லை. உடல் வலிக்க, களைக்க வேலைகளைச் செய்து வருவார்.
'நான் நினைப்பதை எல்லாம் நீயும் நினைக்க வேண்டும். நான் செய்வதை எல்லாம் நீயும் செய்ய வேண்டும்; எனக்கு வேண்டியவர்கள் எல்லாம் உனக்கும் வேண்டியவர்கள் தான்