பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

53


பிரிவினர் ஒதுக்கி வைக்கப்படுவதும், மனித உயிர்களுக்குள்ள உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுவதும், மாபெரும் தவறாகும். அந்த உயிர்களுக்கு ஆசிரம விதிப்படி எல்லா உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என்பதும் அப்போதுதான் கஸ்தூரி பாய்க்குப் புரிந்தது. காந்தியடிகளின் உண்ணாவிரத ஏழாம் நாளன்று அடிகளின் விருப்பப்படி ஆசிரமத்தில் நடந்து கொள்கிறேன் என்று அவர் ஒப்புக் கொண்டு, அன்று முதல் தாழ்த்தப்பட்ட மக்களுடன் சமத்துவமாகப் பழக ஆரம்பித்து விட்டார்.

"ஹரிஜன மக்களுக்காக காந்தியடிகள் செய்த எல்லாப் போராட்டக் கிளர்ச்சிகளிலும், கஸ்தூரிபாய் இணைந்து பங்கேற்று எல்லாவிதமான தொண்டுகளையும் செய்தார்... என்று சரோஜினி தேவி தனது வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

சம்ப்ரான் என்னும் ஊரிலுள்ள அவுரித்தோட்டப் பயிர் விவசாயிகளுக்காக நடந்த போராட்டத்தை 1917ஆம் ஆண்டு காந்தியடிகள் நடத்தினார். அந்தக் கிராம மக்களுடைய உரிமைகளுக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த அந்தப் போராட்ட்த்திற்கு பெண்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த மாதர்களுக்கு வழிகாட்டியாகக் கஸ்தூரி பாயைக் காந்தியடிகள் நியமித்தார்.

அப்போது, சம்ப்ரான் பகுதியில் ஆறு பள்ளிக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பள்ளிகளில் ஒன்றில் கஸ்தூரி பாய் ஆசிரியையாகப் பணி புரிந்தார். கல்வி கற்பிப்பது மட்டுமல்ல அந்தப் பள்ளியின் பணி. கிராமத்து மக்களுக்குரிய அகத்தூய்மையையும், புறத்தூய்மையையும் சொல்லிக் கொடுப்பதும் அப்பள்ளிகளின் வேலை. குஜராத்