உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

55


பிறகுதான், காந்தியடிகள் நடத்திய ஒவ்வொரு போராட்டங்களிலும் அன்னையும் சேர்ந்து பங்கு பெற்றார். கணவரது தேசத் தொண்டுகளுக்கு தானும் இளைத்தவர் அல்லர் என்பதை அன்னை ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொண்டு மெய்ப்பித்தார்.

1921-ஆம் ஆண்டு, காந்தியடிகள் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்று வித்தார். 1922-ஆம் ஆண்டு மகாத்மா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு நாடெங்கும் மிகுந்த பரபரப்பை உருவாக்கி விட்டது.

வழக்கு விசாரணையின் போது காந்தியடிகள் தனது ஒத்துழையாமைக்குரிய காரண, காரியங்களைக் கூறி குற்றங்களை ஒப்புக்கொண்டார். நீதிபதி, காந்தியடிகளைக் குற்றவாளி என்று தீர்மானித்து ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அப்போது இந்தியத் தலைவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார்கள்.

அந்த இக்கட்டான நேரத்தில் போராட்ட இயக்கத்துக்குத் தலைமையேற்று நடத்திட எவருமில்லை. அப்போதுதான் அன்னை கஸ்தூரி பாய், தென்னாப்பிரிக்காவிலே தான் போராடிய வீரத்தின் எதிரொலியாக ஓர் அறிக்கையை விடுத்து தனது அஞ்சா நெஞ்சத்தை, ஆங்கிலேயர் ஆட்சிக்குரிய எதிர்ப்புணர்ச்சியை மக்களுக்கு உணர்த்தலானார். அந்த அறிக்கையின் விவரம் இதுதான்:

"எனது நாட்டுச் சகோதரிகளே!

எனது கணவர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியின் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த நீண்ட காலத் தண்டனையைக் கேட்டு நான் மனம் கலங்க வில்லை என்று