உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அன்னை கஸ்தூரிபாயின்


குறிப்பிடத்தக்க வரலாறாகும். எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியடிகள், தனது சொந்த ஊரான, ராஜ்கோட் சமஸ்தான நகரிலே வழக்குரைஞர் தொழில் செய்த போது, போதிய வருமானம் வரவில்லை என்ற நிலையில் தென் ஆப்ரிக்க நாட்டில் வாழும் இந்தியர் பகுதிக்குச் சென்றார். அப்போது, அவர் தனது மனைவி கஸ்தூரிபாயையும் உடன் அழைத்துச் சென்றார்.

அங்கு இந்தியர்களை இழிவாக நடத்தி வந்த அடிமைத் தனத்தை எதிர்த்து அங்குள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி உரிமைப் போர் என்ற தியாக வேள்வியில் பலரை ஈடுபட வைத்து, தன்னையும் அதில் இணைத்துக் கொண்டு போராடினார்.

அந்தப் போராட்டத்தின் போது சட்டத்தை எதிர்த்து அறப்போர் செய்வதற்கு மகளிர் படையைத் திரட்டி, சக்தியாக்கிரகம் செய்யப் போகும் பெண்கள் எப்படியெல்லாம் சட்ட மறுப்புப் போரைச் செய்ய வேண்டும் என்று தனது திட்ட முறைகளை விளக்கிக் கொண்டிருந்ததை மகாத்மாவின் துணைவி கஸ்தூரிபாய் தனது வீட்டின் ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தார்.

காந்தியடிகள் வீட்டிற்குள் வந்ததும், 'பெண்கள் சட்ட மறுப்புப் போராட்டம் செய்யப் போவதைப் பற்றி என்னிடம் நீங்கள் என் கூறவில்லை? நான் என்ன அதற்குத் தகுதியற்றவளா?' என்று கஸ்துரிபாய் அடிகளாரைக் கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள், "கஸ்தூரி உனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்களைப் பார்ப்பதோடு, மேலும் உனக்குத் தொந்தரவு கொடுக்க என் மனம் விரும்பவில்லை. மற்றப் பெண்களோடு நீயும் சிறை புகுந்தால் எனக்கு