பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7


மகிழ்ச்சிதான். எனது மகிழ்ச்சிக்காக உன்னை நான் சிறை புகவிட விரும்பவில்லை.”

"போராட்டம் செய்வதற்கு பெண்களே துணிந்து வர வேண்டுமே தவிர, நீ போகிறாயா சிறை புக சம்மதமா? என்று கேட்பது சரியல்ல. ஒரு வேளை நீ எனக்காகச் சம்மதித்துப் போராடி நீதி மன்றம் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், அப்போது நடுங்கினால், சிறை புகப்பயந்து பின்வாங்க நேர்ந்து திரும்பி வந்து விட்டால், என்னுடைய அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் அல்லவா? இந்தியர்கள் உரிமைக்குக் களங்கம் உருவாகிவிடுமே...! அப்போது எனது அரசியல் மரியாதை என்னவாகும், என்பதைச் சற்று எண்ணிப்பார். நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? இதையெல்லாம் சிந்தித்துத் தான் நான் உன்னைக் கேட்கவில்லை.... என்றார் காந்தியடிகள்.

"சிறைத்துன்பங்களுக்குப் பயந்து அல்லது நீதி மன்றத்தின் முன்பு மன்னிப்புக் கேட்டு விட்டு நான் வெளியே வந்தால், நீங்கள் என்முகத்தில் விழிக்க வேண்டாம். கஷ்டங்களை, கணவர் அனுபவிக்கும்போது நான்மட்டும், என் பிள்ளைகளுடன் சுகவாசியாக இருப்பேனா? அப்படிப்பட்ட நான் உங்களது மரியாதைக்குரிய மனைவியாவேனா?"

"நான்தான் இந்தப் பெண்கள் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவேன். இதில் யோசித்துப் பார்க்க இருவித கருத்துக்கள் இல்லை".... என்று கூறினார் கஸ்தூரி பாய்.

அதற்கேற்ப, தென்னாப்ரிக்க இந்தியர்களது போராட்டத்தை, குறிப்பாகப் பெண்கள் படைக்குத் தலைமையேற்று அறப்போர் செய்து வீராங்கனையாக சிறை புகுந்தார் கஸ்தூரி பாய்!

அரசியல், பொருளாதாரம், சமூக உரிமைகள் இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாத அன்னை கஸ்தூரிபாய்,