பக்கம்:அன்னை தெரேசா.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2 புரிவதே உனது எதிர்காலக் கடன் ஆகும்!” என்ற ஆண்டவன் கட்டளையை அகத்துண்டுதலாக உணரலானர்; கர்த்தர் பிரானின் அன்பான அழைப்பை அன்பின் ஆண்ை யாக மேற்கொண்டு செயற்படவும் ஆயத்தமானர். 1948 ஆம் ஆண்டில் தெரேசா சுதந்தரமான ஒர் இந்தியப் பிரஜை ஆனர்! - மோத்தி ஜில் சேரியில் அன்புச் சேவைகளைத் தொடர்ந்து செய்யலானர். கிறிஸ்தவ மதப் பெரியவர்களின் இணக்கத்தோடு துறவுக் கன்னி தெரேசா, கல்கத்தா பெருநகரில் ஏழை களுக்குச் செய்து கொண்டிருந்த அன்புத் தொண்டுகளே மக்கள் உணரவும் அறியவும் தலைப்பட்டனர். 1949 மார்ச் 9.ல் நடைபெற்ற புனித சூசையப்பர் நினைவு விழா நாளில் மக்கள் எல்லோருமே தெரேசாவை அன்னே யென்று ஏகோபித்த குரல்களில் அழைத்தனர். - . அன்னை தெரேசா தமது பணிகளே வடிவமைத்து ஒர் இயக்கமாக மாற்றத் தீர்மானித்தார், கனவை நனவாக்க முற்பட்டார். போப்பாண்டவர் ஆசியும் அனு மதியும் வழங்கிட, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை 'யின் ஆதாரத்துடன் தமது அன்பின் அமைப்பிற்கு 1950 அக்டோபர் 7 ஆம் நாளில், கிறிஸ்தவ சமய வாய்முறை வழிபாட்டு நாளில், அன்பின் தூதுவர்கள்’ (Missionaries of Charity) என்று பெயர் சூட்டி, மதப் பெருந் தலைவ்ரின் ஒப்புதலோடு, அன்பு இயக்கத்தைச் சட்டமுறையில் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்தார். 'அன்பின் துர்துவர்கள்’. அமைப்பின் உயிர் நாடி இவ்வாறு பேசியது: "நாம் அனைவருமே அன்பின் தூதர்கள். அன்பே கடவுள்!- கடவுளே அன்பு!-தருமத் தின் ஊழியர்கள் அன்பின் தூதர்கள்தாம். அன்பான புனிதச் சகோதரிமார்கள் ஆன்ம நிறைவோடு இரக்கம் மிக்கவர்களாகத் திகழ்ந்து, ஆன்மபூர்வமான கருணையைக் கிறிஸ்தவ மக்களிடையேயும் கிறிஸ்தவர் அல்லாத ஏனைய