பக்கம்:அன்னை தெரேசா.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 புகழ் படைத்த நோபல் பரிசை வென்ற அன்னை தெரேசா விற்கு, மனிதப் பாசத்தோடும், மானுடப் பண்போடும் ஆன்மநேயத்தோடும் மனித சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றி வரும் மகத்தான அன்புப் பணிகளைப் போற்றிக் கவுரவிக்கும் முறையிலே, நன்மதிப்புச் சி ற ப் பி ன் மரபொழுங்கு வாய்ந்த கெளரவப் பரிசிலை (Order of Merit) ராணியார் சொந்த முறையிலே வழங்கினர். பிரிட்டனின் குடிமகளாக இல்லாமல், ஒர் இந்தியக் குடி மகளாக அமைந்த 73 வயதான மூதாட்டி அன்னே தெரேசா தமது வாழ்நாளிலேயே பிரிட்டனின் மிக உயர்ந்ததான இந்தக் கீர்த்திப் பரிசைப் பெறுவதென்பது மற்றுமோர் உலகப் புகழ் வாய்ந்த அன்புச் சேதியாகவும் ஆகிறது அல்லவா? மேன்மை மிகுந்த இந்தக் கவுரவத் தைப் பெற்ற முதல் இந்தியர் முந்தையப் பாரதக் குடியரசுத் தலைவரான அமரர் டாக்டர் இராதாகிருஷ்ணன் என்னும் அரிய செய்தியும் இந்திய மக்களுக்கு மன நிறைவும் மனக்களிப்பும் தரும்!