பக்கம்:அன்னை தெரேசா.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


உலகத்தின் உயர்ந்த புகழைக் கொண்ட நோபல் பரிசு (The Noble Prize), உலகத்து மக்களின் அன்புப் புகழைக் கண்ட அன்னை தெரேசாவைத் தேடி வந்தது. வங்கக்கவி மன்னர் தாகூர், தமிழ்ப்பெரு விஞ்ஞானி சர். சி. வி. ராமன் ஆகியோரைத் தொடர்ந்து வந்த பரிசு இது!-யூகோஸ்லேவியா நாட்டில் பிறந்து, இந்திய நாட்டின் குடிமகளாக ஆன அன்புத் தாய் தெரேசா, பழம் பெரும் நாடான பாரதத்தின் உலகளாவிய சமாதானக் கொள்கையை உலக அரங்கத்தில்ே மென்மேலும் தார்மிக நெறியுடன் ஒளிபெறச் செய்திட ஊக்கமும் ஆக்கமும் பெறும்வகையிலே, மாண்புமிக்க நோபல்பரிசிலை வென்ருர்: சுழலும் உலகத்தின் நாடுகளிலே, சூழ்நிலைச் சுழலில் சிக்கி உருகியும் உருக்குலைந்தும் சின்ன பின்னமாகிக் கிடக் கின்ற ஏழை எளியவர்கள், சமூகத்தினல் புறக்கணிக்கப் பட்டவர்கள், விதியின் தப்புக் கணக்குக் காரணமாக, பிறக்க வழி தெரிந்தும், வாழவழி புரியாமல் கைவிடப் பட்ட அவமானக் குழந்தைகள், உடல் நலிந்து உள்ள ம் நலிந்த நோயாளிகள், வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து அன்பிற்காக ஏங்கித் தவித்த நாதியற்ற அனுதைகள் போன்ற பாவப்பட்ட ஜன்மங்களுக்கெல்லாம் மெய்யான அன்பைத் தரிசிக்கவும், உணரவும், நம்பவும், அனுபவிக் கவும், ஆறுதலடையவும், அகமகிழவும் கூடிய பொன்னை தொரு நல்வாய்ப்பை ஏற்படுத்தி, நடமாடுகின்ற ஒர் அன்புத் தெய்வமாகவே இயங்கி, அன்பையே தெய்வமாக மெய்யித்துக் காட்டி, ஏழைகளுக்காகவே தாமும் ஏழை யாகவே வாழ்ந்து, அன்புத் தொண்டாற்றி வருகின்ற அன்னையின் மனிதாபிமானம் சிறக்கும் பொதுநலப் பணி களே இந்த மகத்தான நோபல் பரிசில் உலகிற்கு என்றென்றும் சொல்விக் கொண்டேயிருக்கும்! சாதி, மதம், இனம், மொழி, நாடு நிறம், கடந்த உலகளாவிய வழிகளில் ஏழைச் சமுதாய்நலப் பொதுப்பணிகளை அல்லும் பகலும் ஒரு தவயோகம் போலவே செய்து வருகின்ற