பக்கம்:அன்னை தெரேசா.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கல்கத்தா பெருநகரில் கீழ் வளைவு வீதியில் அன்னை தெரேசா ஆரம்பித்து வைத்த நிர்மல் இருதயம்' என்னும் படியான குழந்தைகள் காப்பகம்’ (Nirmal Shisu Bhavan), நாளும் பொழுதும் வளர்ந்தது; ஆண்டுகள் கூடக்கூட. காப்பகத்தின் பேரும் புகழும் கூடின. அங்கே வந்தணைந்த, குழந்தைகளின் எண்ணிக்கையும் கூடிற்று. இப்போது, அன்னேயின் அன்புப் பணி இயக்கம் என்னும் ஆலமரத்திற்கு உயிரும் உயிர்ப்பும் தரவல்ல விழுதுகளுள் ஒன்ருகவும் அந்: நிறுவனம் விளங்கத் தொடங்கியது. . ஆண்டுகள் பதினறு உருண்டோடிய பின்னர், பழைய குழந்தை நலவிடுதிக்கு எதிர்ப்புறத்தில் இப்போது புதிய குழந்தைகள் இல்லமும் இணைந்தும் பிணைந்தும் செயற். படத் தொடங்கின; தொண்டுழைப்பின் ஆக்கபூர்வமான வெற்றி அன்பு முரசு கொட்ட, நிர்மல் கென்னடி இல்லம் கம்பீரமாகவே வளரலாயிற்று. உலக அரங்கத்தில் அன்பும் அறமும் பூண்டு, அனைத்துக்கும் மேலாக, மனித அபிமானப் பண்பு மேலோங்க மக்கள் நலப் பணி புரிந்து மாசற்ற, மாணிக்கமாகப் பொலிந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அபிமானத் தலைவரான ஜான் கென்னடியின் புகழ் என்றென்றும் வாழவேண்டுமென்ற பொதுமை நலப் பண்புடன் அமைந்தது ஆயிற்றே இந்தப் புதுக் காப்பகம்! புதிதாகத்தோன்றிய காப்பகத்தில் உடல் வளம் பெற, நல்ல உணவும், உள்ளம் செழுமை அடைய நல்ல படிப் பறிவும் வழங்கப்படுவதுடன், அவர்களுடைய ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கான வாழ்க்கை நலப் பயிற்சிகளும் ஒழுங் காகவும் முறையாகவும் அளிக்கப்படுகின்றன. தாய் அன்பை இன்னதென்று அறியாத பச்சிளங்குழவிகளும் சரி, தாய்முகம் பாராத பச்சைமண் செல்வங்களும் சரி, இங்கே இந்தக் குழந்தைகள் காப்பகத்தின் தலைவாசலை மிதிக்கக் கூடிய பாக்கியம் பெறுவார்களேயானல், அப்பால், அவர்களை மதியாதார். இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள்; இருக்கவும் முடியாதுதான்! இப்படிப்பட்ட