உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அண்ணாவின்


ஆனால், நமது மக்கள் அந்த விஞ்ஞானிகள் சிந்திய வியர்வையைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா ?

ரயிலில் செல்கிறாேம், காரிலே போகிறோம், சைகிள் மின்சார விளக்கு — எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கிறாேம். இவையாவும் நாம் அனுபவிக்க ஏற்பட்டவை என்ற எண்ணத்தில், மாமியார் வீட்டு மருகனைப்போலத்தானே இருக்கிறோம்!

இவைகளைப்பற்றி, என்றாவது நாம் சிந்தித்தது உண்டா? நினைத்ததுண்டா?

இல்லையே! என்ன பிரயோசனம்? குத்து விளக்கு அளவில்தான் நாம் இருக்கிறாேமே யொழிய சாதாரண அரிக்கன் விளக்கு அளவுகூட நாம் முன்னேறவில்லையே! இங்குள்ள மின்சார விளக்கு திடீரென்று அணைந்து விட்டால் எவ்வளவு பதைக்கிறாேம். நமக்கு மட்டுமல்ல சங்கராச்சாரியார் இருக்கிறாரே, அவருக்குந்தான் ஏற்படுகிறது, பதைப்பு!

ஆனால், அதன் அருமை பெருமையை, தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறாேமா இல்லையே! அதுமட்டுமா, நவீன வசதிகளை நன்றாக அனுபவித்துக் கொண்டே அவைகளை இகழ்ந்தும் அல்லவா போகிறாேம்!

இது நல்லதா? விஞ்ஞானத்தை இகழ்ந்து பேசுவது மிக மிகத்தவறு. விஞ்ஞான மனப்பான்மையை இகழ்ந்தால், எப்படி அதன் மீது மதிப்புவரும், மக்களுக்கு?

விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் வளர்ந்து அணுகுண்டு வரைக்கும் வந்து அழிவு சக்தி பெருகி விட்டதாகச் சிலர் ஓலமிடுகின்றனர்—அதிலும் வேடிக்கை, யார் விஞ்ஞான வசதிகளை அதிகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களே போகின்றனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/29&oldid=1661874" இலிருந்து மீள்விக்கப்பட்டது