பக்கம்:அன்பின் உருவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அன்பின் உருவம்


வையில் முயற்சி இருக்கிறது. ஆனல் கண்ணிர் ததும்பு. வது முயற்சியினல் வருவது அன்று, உண்மையான அன்புணர்ச்சியின் விளைவாகத் தானே உண்டாவது அது.கைகுவிப்பதாகிய செயல் யாவரிடமும் பொதுவாக இருக் தாலும், மெய்யரும்புதலும் விதிர் விதிர்த்தலும் மெய்யன் பரிடமே காண முடியும். கண் பார்வையில் பிறவற். றைப் பாராமல் இறைவனேயே நோக்குகிறவர்கள் இறை வன்பால் கோக்கமுடையவர்கள். அவர்களிலும் அவன் கழலைக் காண்பவர்கள் தலையானவர்கள். கழலேக் கண்டு கண்ணிர் விடுகிறவர்கள் மிக மிக உத்தமமானவர்கள்.”

"மெய்யான அன்பர்கள் மிக அரியரென்று தெரி கிறது. பொய்யான வேடதாரிகளே பலர் போலும் !"

“வேடதாரிகள் என்று சொல்லவேண்டாம். பொய் யான வாழ்க்கையிலே மோகம் கொண்டவர்கள் உலகத்தில் மிகுதியாக இருக்கிருர்கள். இறைவனே அணுகும்போது கூட அந்தப் பொய் அவர்களே விட்டு விலகுவதில்லை. அடி யார்களுடைய கூட்டத்தில் கலந்து கைகுவித்து வாயார வாழ்த்தும் பழக்கம் அவர்களிடம் உண்டாக உண்டாக அந்தப் பொய் கிலே மெல்ல மெல்லக் கழலுகின்றது. பொய். யான பற்றும், பொய்ப் பொருளில் மோகமும் முற்றும் ஒழி'யும்போது இறைவனிடம் முறுகிய அன்பு தலைப்படுகிறது. அதுவரையில் மற்றவர்களைக் கண்டு, அவர்கள் செய்கிற காரியங்களே இவர்களால் செய்ய இயலும். மெய்யன்பர்கள் தலையின்மேல் கை குவிப்பதைக் கண்டு தாமும் கைகுவிப் பார்கள். அவர்கள், போற்றி சய சய போற்றி என்று வாழ்த்துவதைக் கண்டு தாமும் வாழ்த்துவார்கள். ஆனல் அவர்களுக்கு உண்டாகும் புளகமும் நடுக்கமும் இவர் களுக்கு உண்டாவது இல்லை. கண்ணிர் ததும்புவதில்லை. ங்ாளடைவில் உண்மையன்பர்களோடு சேர்ந்து சேர்ந்து இவர்களுக்கும் அன்பு உதயமாகிறது. காந்தத்தோடு உரா