அமுதப் பெருங்கடல் 39
ருடைய வாக்கையெல்லாம் தனக்காகவே ஆக்கிக் கொண்டான்.
அதற்கு முன்னலே வந்த வாக்கெல்லாம் இந்த உலக வாழ்க்கையோடு ஒட்டியனவாக இருந்தன. பல காலம் பிறந்து பிறந்து வாழ்ந்ததல்ை படிந்த வாசனை அது. இறைவனுடைய திருவருளுக்குள் ஒன்றிய பிறகு, சிந்தனே அவனுக்கென்று ஆன பிறகு, கண்ணினே அவன் திருப் பாதப் போதுக்கு ஆக்கிய பிறகு, வங்தனேயும் அத்திருவடி மலருக்கென்று ஆன பிறகு, வாக்கு இறைவனுடைய புகழைப் பேசும் வாக்காகிவிட்டது. அப்பொழுது வருகிற வார்த்தைகளெல்லாம் மணி வார்த்தை என்று சொல்கிருர். அவர் மாணிக்கம் போன்ற வார்த்தைகளைப் பேசினவர். அதல்ைதான் மாணிக்கவாசகர் என்ற திருகாமம் உண் டாயிற்று. இறைவனே மணிவாசகன் என்று திருநாமம் அளித்ததாகச் சொல்லுவார்கள். எப்படியோ இறைவ னுடைய திருவுள்ளக் கிடக்கையாக இருந்தாலும் சரி, மணிவாசகப் பெருமானுடைய உள்ளக் கிடக்கையாக இருக் தாலும் சரி, திருவாசகத்தைப் படிக்கிறவர்களுடைய கிடக் கையாக இருந்தாலும் சரி, அந்த வார்த்தைகளெல்லாம் இறைவனுடைய வார்த்தைகள்; ஆகையில்ை வெறுங் கல்லேப் போல இல்லாமல் மாணிக்கக் கல்லேப் போலாயின.
வாக்குஉன் மணிவார்த்தைக்கு ஆக்கி.
"தாம் பாடுகிற பாட்டை மணி வார்த்தை என்று தாமே சொல்லிக்கொள்ளலாமா? அது அகங்காரத்தின் விளைவு அல்லவா? என்ற ஐயம் இங்கே எழலாம். 'ஆண் டவனே, நீ எனக்குத் திருவருள் தந்து என்னுடைய வாக் கையெல்லாம் உனக்காக ஆக்கிக்கொண்டாய். உன்னேப் பற்றிய வார்த்தைகளாதலின், மணிவார்த்தைகளாயின." என்ற பொருளோடு அவர் சொல்லுகிருர் அவர் பாடுவத, ேைல அது மணிவார்த்தை ஆகவில்லை. அப்படி இருந்தால்,