பக்கம்:அன்பின் உருவம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


连夺 அன்பின் உருவம்

ஐம்புலன்கள் ஆர

வந்தன.ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை

மாலமுதப் பெருங் கடலே!

ஒரு பெரிய கடல் உள்ளத்துக்குள்ளே புகுந்துவிட்டது . உயிருக்குள்ளே புகுந்துவிட்டது. உயிரையெல்லாம் கிரப்பி விட்டது. உயிரையே நிரப்பும்பொழுது உயிருக்கு அடங் கின புலன்களே நிரப்பாதா? ஐம்புலன்களும் கிரம்பிவிட் டன. அப்படி இறைவன் வந்தான். மணிவாசகரை ஆட்கொண்டான். -

உலகில் இன்ப அநுபவப் பொருள் தருவார் என்று யார் யாரை காம் கினேக்கிருேமோ அவர்களாலே நமக்கு முழு கிறைவாக அநுபவத்தைக் கொடுக்கும் ஆற்றல் இருப்பதில்லை. இறைவன் அருள் ஒன்றுதான் பிறைந்த அதுபவத்தைக் கொடுக்கும். இது பெரிய வித்தை.

கடல் என்ருல் நமக்கு உப்புக் கடல்தான் கினேவுக்கு வருகிறது. பாற்கடல், தேன் கடல், தயிர்க் கடல் என்று வெவ்வேறு கடல்கள் உண்டென்று புராணங்கள் சொல் கின்றன. பாற்கடலில் அமுதம் பிறந்தது. ஆல்ை அது முழுமையும் அமுதமாக இருக்கவில்லை. அக்கடலில் பால் தான் இருந்தது. பாலேக் கடைந்து மிக வருந்தித் தேவர்க ளெல்லாம் ஏதோ ஒர் அளவு அமுதத்தைப் பெற்ருர்கள். அந்த அமுதத்தை எதற்கெடுத்தாலும் உவமையாக எடுத்துச் சொல்கிருேம். இறைவனே அமுதம் நிரம்பின பெருங் கடலாக இருக்கிருன். அது பெரிய கடலானலும் அடியவர்களுடைய சிறிய உயிருக்குள் புகுகின்றது.

உள்ளே புகுந்த விச்சை மாலமூதப் பெருங் கடலே! தம் அநுபவ கிலேயை நினத்துப் பேசுகிருர், மணி வாசகர். அந்த அநுபவம் எல்லேயற்றதாக இருப்பதால்