பக்கம்:அன்பின் உருவம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுழையும் எளிமையும் 53

ஒரு பொருள் கிடைக்குமட்டும் அது அரியதாகவும் மதிப்புடையதாகவும் இருக்கும். அது கிடைத்துவிட்டால் அதன்பால் உள்ள ஆர்வமும் மதிப்பும் குறைந்துவிடும். இது உலகியற் பொருளுக்குரிய கிலே. ஆனல் இறைவன் வந்து ஆட்கொண்டான். அதன் பின்னும் அவன் அரியவ கைவும், பெரியவனாகவுமே தோற்றுகிருன். பெரியவர் களோடு பழகுகிறவர்களுக்கு நாளுக்கு நாள் அவர்களுடைய பண்பு தெரிந்து கொண்டே இருக்கும்; அவர்களிடம் மதிப்பு உயரும். இழி குணத்தோர்களிடம் பழகப் பழக வெறுப்பு உண்டாகும். இறைவன் ஆட்கொண்டான். அதல்ை அவன் எளிய பொருளாகி விடவில்லை. சிறிய பொருளாகி விடவில்லை. நாம் அறிந்த பொருள்களுக்குள் நம்மால் எல்லே காண முடியாதவை இரண்டு. ஒன்று' இடம்; மற்ருென்று காலம், இடத்தின் எல்லேயை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. காலம் என்று தொடங்கியது, என்று முடிகிறது என்பதை கினேத்தாலே தலை சுற்றும். - - -

இறைவன் எல்லையற்ற பொருள்; பெரிய பொருள். எல்லேயற்ற பொருளாக உள்ள இரண்டை காம் அறி. வோம். அந்தப் பொருள்களைப்போல அவன் இருக்கிருன் என்று சொல்லலாம். அவை இரண்டுமாகவும் இருக் .கிருன். இடத்திற் பெரியது நாம் வாழும் பூமி, இதனையும் உள்ளடக்கிய விசும்பு அதைவிடப் பெரியது. இரண்டும் இறைவனுடைய கோலங்தான். -

ஞால மேlவிசும்பே' ஞாலமும் விசும்புமாகியவற்றுக்குள்ளே எல்லாம் அடங்கிவிடும். ஞாலம் பிருதுவி தத்துவம்; விசும்பு என்றது ஆகாசம். ஐம்பெரும் பூதங்களில் முதலில் தோற்றுவது விசும்பு இறுதியில் தோற்றுவது ஞாலம்.