பக்கம்:அன்பின் உருவம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54. அன்பின் உருவம்

இவை ஒடுங்கும்போது முதலில் ஞாலமும் இறுதியில் விசும்பும் அடங்கும். பிருதுவி இல்லாத ஒரு காலத்தில் விசும்பு இருக்கும். விசும்பு இல்லாத காலத்தில் எந்தப் பூதமும் இருப்பதில்லை. இறைவனுக்குரிய அட்ட மூர்த்தங் களில் ஐம்பெரும் பூதங்களும் சேரும். முதலேயும் முடிவை யும் சொன்னதனுல் இடையில் உள்ளவற்றையும் சேர்த்து ஐம்பெரும் பூதங்களாக நிற்பவனே என்று சொல்லலாம். இந்தப் பூதங்களுக்குத் தோற்றம் உண்டு; ஒடுக்கம் உண்டு. இவை வந்து போகின்ற காலம் என்னும் தத்துவம் இன் னும் பெரியது. அந்தக் காலமாகவும் இறைவன் இருக் கிருன்.

- இவை வந்துபோம், காலமே!

தேவர்களும் அறிய வொண்ணுத கோலமாக இருப் பவன் என்னே ஆட்கொண்டான். அப்படி ஆட்கொண்ட போது எனக்கு எளியவகை இருந்தாள். மீண்டும் அரியவ னகவே நிற்கிருன், அவனைக் காணுமல் தவிக்கிறேன். என்று எண்ணுகிருர் மணிவாசகர்; முறையிடுகிரு.ர்.

மேல் வானவ ரும் அறி யாததோர் கோல மேlஎண் ஆட்கொண்ட கூத்தனே! ஞால மேlவிசும் பேlஇவை வந்துபோம் கால மே உன என்றுகொல் காண்பதே? (மேலிடத்தில் உள்ள தேவர்களும் அறியாத ஒரு கோலமே! எனக்கு எளியணுக வந்து என்னே ஆளாகக் கொண்ட கடத்தப் பிரானே ஞாலமாகவும் விசும்பாகவும் இருப்பவனே இந்தப் பூதங்களெல்லாம் தோன்றி ஒடுங்க கின்ற காலமே உன்னை அடி யேன் மீட்டும் காண்பது எந்த நாளோ? -

மேலே ; ஐ. சாரியை. கோலம் உருவம். ஞாலம் - பூமி. விசும்பு ஆகாயம். -