பக்கம்:அன்பின் உருவம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான நாடகம்

மணிவாசகர் இறைவனுடைய திருவருளேப் பெற்ற வகையை எண்ணி எண்ணி வியந்து உருகுவதைப் போல வேறு யாரும் உருகியது இல்லை. ஏழை ஒருவனுக்குப் பெருஞ் செல்வம் கிடைத்தது போலவும், பட்டினி கிடந்த வனுக்கு உணவு கிடைத்ததுபோலவும் இறைவன் அருளேப் பெற்றதனால் உண்டான இன்பத்தில் அவர் களிக்கூத்தாடு கிருர், 'என்னே ஆண்டுகொண்டது என்ன ஆச்சரியம்!” எனறு வியப்படைகிருர்.

உலகத்தில் உள்ள உயிர்க் கூட்டங்களுக்குள் மனிதன் உயர்ந்தவன். மற்றப் பிராணிகளே யெல்லாம் அவன் அடக்கி ஆள்கிருன். உயர்ந்தவர்களாக இருப்பவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களுக்கு உதவி புரிந்து தம்முடைய உயர்வை நாட்டிக்கொள்வதுதான் சிறந்த முறை. அப்படி யின்றி அதிகாரத்தாலும் அச்சுறுத்துவதலுைம் தம் தலைமையை நிறுவுவது இழிந்த முறை. தம்முடைய ஆற்ற லாலும் பதவியாலும் உலகம் முழுவதுக்கும் கன்மை செய் கிறவர்கள் சுரர்கள். தம்முடைய ஆற்றல் முதலியவற்ருல் பிறருக்கு அச்சத்தை ஊட்டுகிறவர்கள் அசுரர்கள். குணத். தால் உயர்ந்தவர்கள் தேவர்களுக்குச் சமானம்.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்'

என்று வள்ளுவர் கூறினர் அல்லவா? உயர்ந்தவர்களே உயர்ந்த இடத்தில் வைத்துப் பாராட்டுவது உலக இயல்பு. வானவர்கள் தம்மினும் தாழ்ந்த மக்களுக்கும் பிறருக்கும் உபகாரம் பண்ணுகிறவர்கள். அவர்கள் உயர்ந்த இடத்.