பக்கம்:அன்பின் உருவம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அன்பின் உருவம்


"அன்புக்கு உருவம் உண்டா? அது குணம் அல்லவா?”

ஆனாலும்...” இளைஞர் பேச வகை தெரியாமல்

விழித்தார். .

முதியவர் மறுபடியும் புன்னகை பூத்தார். "ஆம்,

அன்பு குணந்தான்; அது காட்சிப் பொருள் அன்று: கருத்துப் பொருள். அதைக் கண்ணால் காண முடியாது. இவர்களுடைய வேடமும் செயலும் பேச்சும் அன்பை நினைப்பூட்டுகின்றன. அதனல் இவர்களை அன்பர்கள் என்று எண்ணுகிறாய்.” -

'அது உண்மைதான். அன்புக்கு இவர்கள் செயல்கள் அடையாளங்களாக இருக்கின்றன.”

"இத்தனே பேரும் உண்மையான அன்பர்கள் என்று சொல்ல முடியாது. அன்பைப் புலப்படுத்தும் அடையாளங்கள் உண்டு. ஆனல் அடையாளங்களில் இயற்கையாக அமைவன சில செயற்கையாக உள்ளவை சில."

"எனக்குத் தெளிவுபடவில்லை" என்றார் இளைஞர். . "அதோ அங்கே மூலையில் தூணோடு ஒட்டியபடி இருக்கும் அன்பரைப் பார். பக்கத்திலே சென்றாகிலும் பார்த்துவிட்டு வா. உடம்பைக் கவனி, கையைத் தலையின் மேல் குவித்திருப்பதைக் கண்டு வந்துவிடாதே. அவர், உடம்பின் மேலுள்ள மயிர்க்கால்களைக் கவனித்துவிட்டு வா” என்று முதியவர் சொன்னர். . .

இளைஞர் அவ்வாறே அந்தத் தூணருகே சென்ருர்,

மெல்ல அங்கே சற்று நின்று பார்த்தார். அந்தப் பக்தர் கண்ணை மூடிக்கொண்டே, "சிவ சிவ சிவசிவ சயசய போற்றி போற்றி!” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இளைஞர் அவர் திருமேனியைப் பார்த்தார். இளைத்து உலர்ந்து என்பு எழுந்து இயங்கும் யாக்கை அது. அதில் மேலாகப் பார்க்கிறவருக்கு ஒரு கவர்ச்சியும் இராது. இளைஞர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/8&oldid=1178995" இலிருந்து மீள்விக்கப்பட்டது