பக்கம்:அன்பின் உருவம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*78 அன்பின் உருவம்

கள். கனமுள்ள குழைகளே அணிவதனால் காதுகள் தாழ்ந் திருக்கும். முகம் அசையும்போது குழைகள் ஊசலைப் போல ஆடும். அம்மானே ஆடுகையில் மேலும் கீழும் பார்ப்பதல்ை முகம் அசைய, தாழ்ந்த குழைகளும் ஆடு கின்றன. - -

கையார் வளேசிலம்பக் காதார் குழைஆட.

இந்த விளையாட்டில் ஊக்கமாக இருக்கும் மகளிருக்கு உண்டாகும் களிப்பை அளவிட முடியுமா? தலையை மேலும் கீழும் ஆட்டுகிருர்கள். களிப்பினல் தலையை அசைக்கிருர்கள். அப்போது அவர்கள் குழல் புரள்கிறது. நெடுங் கூந்தலே உடையவர்கள் அவர்கள். குழலே நீண்ட முடிச்சாக முடிந்திருந்தும் அது புரளுகிறது. உவகை மிகுக் தால் குழல் அவிழ்ந்து புரள்வதும் உண்டு. -

அந்தக் கூந்தலிலே மங்கலத்துக்கு அறிகுறியாக மலர்க்கொத்தைச் குடியிருக்கிருர்கள். அவை அப்போது அலர்ந்த மலர்கள், மணம் கிரம்பித் தேன் பொங்கும் மலர்கள். தலை அசைவதனால் மலர்கள் அசைகின்றன. அவற்றில் உள்ள தேன். கட்டுக் குலேந்து பாய்கிறது. தேன் உள்ள இடத்தில் வரவேற்பு இன்றியே வரக் காத்திருக் கின்றன. வண்டுகள். அவை வந்து மொய்க்கின்றன; .

இன்னிசை முரலுகின்றன. - -

மையார் குழல்புரளத் தேன்பாய வண்டுஆர்ப்ப்.

'கம்முடைய ஊர்ப் பெண்கள் அம்மானை ஆடும் போது தலையிலிருந்து தேன் பாயுமா ? தேன் பாய, அதில் வண்டுகள் பாய்ந்து ரீங்காரம் செய்யுமா? இது இயற்கைக் குப் பொருத்தமாக இல்லையே! வளே சிலம்புவதும், குழை ஆடுவதும், குழல் புரள்வதும் இயற்கையாக இருக்கின்றன். அவற்றிற்குமேல்......"-இப்படி ஒரு கேள்வி எழலாம்.