பக்கம்:அன்பின் உருவம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அம்மானேப் பாட்டு 79.

மணிவாச்கப் பெருமான் இங்கே உண்மையாக அம். மானே ஆடவில்லை. தம் உள்ளத்துக்குள்ள்ே தம்மைப் பெண் ஆக்கிக்கொண்டு, கினேவு எழுகின்ற மனத்தைத் தோழியாக்கிக் கற்பனையினல் ஆடுகின்ற ஆட்டம் இது. அந்தக் கற்பனேயில் எவை எவை இனிய பொருள்களோ, எவை எவை அழகிய பொருள்களோ அவற்றையெல்லாம். சேர்த்து வைத்துப் பாடுகிரு.ர்.

இயல், இசை, நாடகம் என்னும் மூன்றிலும் நாடகம் மிகுதியான இன்பத்தைத் தருவது. நாடகம் வாழ்க்கை யைப்போல இருக்க வேண்டும் என்று நாடக கலம் தெரிந்த வர்கள் சொல்கிருர்கள். வாழ்க்கையைப் போல இருப்பது தான் நாடகமே ஒழிய வாழ்க்கையே நாடகம் ஆகாது. வாழ்க்கையில் அழகுள்ள பொருள்களும் அழகில்லாத பொருள்களும் இருக்கும். அழகும் இனிமையும் உள்ள பொருள்களேயெல்லாம் ஒரு சேரத் தொகுத்துக் காட்டுவது தான் நாடகம். அழகில்லாதனவும் இனிமையற்றனவு மாகத் தோற்றும் சில பொருள்கள் அழகும் இனிமையும் உள்ளவற்றினல் விளேயும் இன்பத்தை மிகுவிக்கவே நாட கங்களில் வரும் நாடக வழக்கு என்று தொல்காப்பியத் தில் ஒரு தொடர் வருகின்றது. அங்கே இளம்பூரணர் என்ற உரையாசிரியர், 'நாடக வழக்காவது சுவைபட வரு வனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறு தல்' என்று எழுதுகிரு.ர். கற்பனையும் அத்தகையதே. கற்பனையாகச் சொன்ன செய்தி வாழ்க்கைக்குப் புறம் பாகத் தோன்ருது. ஆல்ை, அப்படியே மனித வாழ்வு அமைவதில்லை. - . - - வாழ்க்கையில் இனிமையாக இருப்பவற்றைத் தொகுத் துச் சொல்வது கற்பனைக் கவிஞர்களுக்கு உள்ள சிறப்பு. நாம் இனிம்ை காணுத பொருள்களிலும் இனிமையைக் கிண்டு உணர்த்தும் ஆற்றல் அவர்களிடம் இருக்கிறது.