பக்கம்:அன்பின் உருவம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மானைப் பாட்டு 81

மனத்துக்குள் சுவை உண்டாகும். அப்படிச் செய்வதுதான் சிறந்த கவிதை. -

★ மணிவாசகப் பெருமான் உலகில் மகளிர் ஆடும் விளே யாட்டை மாத்திரம் நினைக்கவில்லை. எம்பெருமான நினைத்துப் பிறகே இந்த விளையாட்டை கினைத்தார். அம்மானை விளையாட்டை ஆடுவதற்கே காரணம் எம்பெரு மான் பெருமையைப் பாடுவதற்குத்தானே? தோழிமார்கள் கையில் உள்ள வளே சிலம்பவும் காதிலே உள்ள குழைகள் ஆடவும் மையார் குழல் புரளவும் தேன் பாயவும் அதில் வண்டுகள் மொய்ப்பவும் அம்மானே ஆடுகிருர்கள். வண்டின் சிங்காரச் சுருதி போட்டாகிவிட்டது. இனிப் பாடவேண்டியது தானே ? - -

இதுவரைக்கும் அவர்களுடைய புற அழகு தெரிந்தது. மணிவாசக நாயகியோடு இருந்து விளையாடும் தோழிமார் கள் புற அழகு மட்டுமா உடையவர்கள்: மணிவர்சக காயகி எப்படி இருக்கிருள் கையார் வளையும் காதார். குழையும் மையார் குழலும் உடையவள்தான். அவற்ருல் மட்டும் பெருமை வந்துவிடாது. எம்பெருமானிடம் உள்ள காதலிலே ஊறிக் கிடக்கும் உள்ளத்தை உடையவள். அவள் மற்றத் தோழிகளும் அப்படியே உள்ளவர்கள். அது எவ்வாறு புலப்படுகிறது? அவர்கள் உள்ளத்தில் உண் டாகும் காதல் உணர்ச்சி அவர்கள் பாடும் பாட்டிலே புலகிைறது.

பெண்கள் விளையாடும்போது அவர்களை அறியாமலே பாட்டு வரும்; அவர்கள் உள்ளத்தில் உள்ள உணர்ச்சி களெல்லாம் திரண்டு பாட்டாக வரும். கட்டு ஏதும் இல் லாமல் மனம் உல்லாசமாகக் கற்பனை வானத்திலே திரிய விளையாடும் விளையாட்டு ஆதலால் கருத்து அவிழ்ந்து பாட் டாக மலர்கிறது. இந்தப் பெண்களுக்கோ இறைவனுடைய

6 - . . . . . . . . . . . . . . " -