உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . அன்பின் உருவம்

கினேவையன்றி வேறு ஒன்றும் இல்லை. அதனல் அவர்கள் பாடும் பாட்டு வேறு எதைப் பற்றியும் இருக்க கியாயம் இல்லை. இறைவனேப் பற்றியே பாடுகிருர்கள். -

இறைவனுடைய திருமேனிக் கோலத்தைப் பாடுகிருர்

கள். அவன் பேரழகன். செம்மேனி எம்மான்; செய்யான்.

அதன்மேல் தூய வெண்ணிற்றை அணிந்திருக்கிருன்.

செய்யானே வெண்ணிறு அணிந்தானே.

- ★

அழகளுக மாத்திரம் இருந்தால் பெண்களுக்கு ஒருவ னிடம் காதல் பிறக்காது. அவன் ஆண்மையுடையவனுக, வீரகை, வெற்றி மிடுக்கு உடையவனாக இருக்கவேண்டும். இறைவன் பேராண்மை உடையவன். அவனே வெல்வார் யாரும் இல்லை. தன்னுடைய ஆற்றலாலும் பிறவற்ருலும் எல்லாரினும் சிறந்து கிற்கிறவன் அவன். அவனே ஒத்தவர் யாரும் இல்லை. தனக்கு உவமையில்லாத தலைவன் அவன். அவன் ஒருவன்தான் தலைவன் ஏக சக்கராதிபதி. அகில புவனத்தில் உள்ள்வர்களும் அவனுக்கு அடங்கினவர்கள். அங்கங்கே சில சில கூட்டங்களுக்குத் தலைவர்களாக இருந்து ஆண செலுத்துகிறவர்கள் யாவரும் அவன் வைத்த ஆட் கள். தம்மிடம் ஏவல் புரிபவர்களே நோக்கும்பொழுது அவர்கள் தலைவர்கள். ஆனல் இறைவனே நோக்கும்போது அவர்கள் அடிமைகளே. தலைவர் என்று அதிகாரத்தை மேற்கொண்ட எல்லோருமே இறைவனுக்கு அடங்கின வர்கள்; இறைவனேக் கையெடுத்துக் கும்பிடுகிறவர்கள். இறைவனே தனக்கு மேல் யாரும் இல்லாத சர்வ சுதந் தரன். அவனுக்கு எல்லோரும் ஆட்கள்; அவன் யாருக்கும் ஆள் அல்ல. மற்றவர்கள் யாவரும் அவன் திருமுன்னர்க் கையைச் சேர்த்துக் கும்பிடும் கிலேயில் உள்ளவர்கள். அவன் யாரையும் கும்பிட வேண்டியதில்லை. அவன் கைகள் கும்பிடு போட்டே அறியாதன சேர்ந்து அறியாக் கைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/88&oldid=535510" இலிருந்து மீள்விக்கப்பட்டது