பக்கம்:அன்பின் உருவம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதுபோல் உண்டா? 89.

வண்டுகளைப் பார்த்து, 'இவளுடைய இதழைப் போன்ற ஆம்பலை எங்கேயாவது கண்டிருக்கிறீர்களா?” என்று கேட்கிருன் இறைவனுடைய அன்பன் ஆகை யினல் முதலில் அவனுக்கு இறைவனுடைய கினேவு எழு கிறது. பேரழகியாய் இருக்கிற தன்னுடைய காதலியைக் காணும்பொழுது, அவளுடைய பேரழகை நினேக்கும் பொழுது, எல்லாவற்றிற்கும் மேலான பேரழகளுகிய ஆண்டவனுடைய கினேவும் தோற்றுகின்றது. -

அவளுடைய இடையைப் பார்க்கிருன். அந்த இடைக்கு ஒர் உவமை கூற வருகிருன். தம்முடைய அது பவத்திலிருந்து உவமை சொல்வது மக்களுடைய இயற்கை. ஆண்டவனுடைய திருவடியில் இடையீடு இல்லாமல் அன்பு செய்கிற இந்தத் தலைவன் தன் இயல்புக்கு ஏற்ற வகையில் அந்த இடைக்கு உவமை சொல்ல வருகிருன்.

இடை மெலிந்திருக்கிறது. யார் மெலிவார்கள்? யார் தேம்புவார்கள்? இறைவனுடைய திருவருள் பெற்றவருக்கு வருத்தம் இல்லை; மெலிவு இல்லை. இறைவனுடைய திரு வருளைப் பெருதவருக்கு மெலிவு உண்டு. அவர்களைப்போல அந்த இடை தேம்புகிறதாம். - -

- கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்பு - ஊடுரு கக்குனிக்கும் . . . . . . . பாம்பு அலங் காரப் பரன்தில்க்ல . அம்பலம் பாடலரின் தேம்பலஞ் சிற்றிடை என்று இடையைச் சொல்கின்றன்.

அன்பர்களுக்கு எல்லாம் இன்பம் உண்டாகும்படி யாக நடராஜப் பெருமான் கடனம் ஆடுகிருன். அவனேக்