பக்கம்:அன்பின் உருவம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அன்பின் உதவம்

கண்ட மாத்திரத்தில் அன்பர்களுடைய கைகள் சூரியனைக் கண்ட தாமரை மலர்களைப் போலக் குவிகின்றன. மனமோ விரிகிறது. பக்தி உணர்ச்சி மிக மிக, இறைவனு டைய தரிசனத்தைக் காணக் காண உள்ளம் நெகிழ்கிறது. நெகிழ்ந்து நெகிழ்ந்து இறைவனுடைய பேரழகிலே அவர் கள் ஈடுபடுகிருர்கள். அவர்களுடைய எலும்பு எல்லாம் நெகிழ்கின்றன. அப்பொழுது பேரானந்தத்தை அதுபவிக் கிரு.ர்கள். -

தன்னைத் தரிசிக்கிறவர்கள் என்பையும் உருக்கும்படி ஆடுகிற எம்பெருமான் பேரழகன். ஆயினும் மற்றவர் களிடத்தில் காண முடியாத ஒரு புதுமை அவனிடத்தில் இருக்கிறது. எந்தப் பொருள் பிறருக்கு அச்சத்தை உண் டாக்குமோ, அதனே அவன் ஆபரணமாக அணிந்திருக் கிருன். கஞ்சுடைய காகத்தை மக்கள் கண்டால் அஞ்சு வார்கள்; அதனிடம் உள்ள மாணிக்கத்தை மாத்திரம் தனியே கொடுத்தால் அணிவார்கள். இறைவனே நஞ் சோடு கலந்த காகத்தையே பூணுக அணிந்து கொண்டிருக் கிருன். அவன் பாம்பலங்காரப் பரன். கூம்பல் அம் கைத் தலத்தையுடைய, அன்பருடைய எலும்பு எல்லாம் உள்ளே உருகும்படியாக நடனம் செய்கிறவன் ஆண்டவன் அவன் தில்லேயம்பலத்திலே ஆடிக்கொண்டிருக்கிருன். -

அந்த அம்பலத்தில் அவனேக் கண்டு, அவனுடைய ஆட்டத்திலே இன்பத்தை அடைந்து, அவனைப் பற்றிப் பாடாமல் இருக்கிருர்களே. அவர்கள் எதற்காக வாழ் கிருர்கள்? அவர்கள் வாக்குப் பெற்ற தல்ை பயன் என்ன? அந்த வாக்குக்குச் சோறு கிடைக்குமா? - பாடாத வாய்களுக்குச் சாப்பாடு கிடையாது. அதல்ை அவர்கள் உடம்பு தேம்புவார்கள் உள்ளமும் தேம்பு வார்கள். மக்களிடத்தில் யாசகம் செய்து செய்து, தங்க ளுடைய வாழ்வைப் போக்குவதையே தொழிலாகக்கொண்