பக்கம்:அன்பின் உருவம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 'அன்பின் உருவம் போலக் கமழ்கின்ற ஆம்பற் பூவை எங்காவது பார்த்திருக் கிறீர்களா?" இதழைப் போன்றது என்றால் அதன் புறத் தோற்றத்துக்கு உவமை தேடுவதாக எண்ணலாமென்று, இதழின் மணம் உள்ள பூ உண்டா என்று கேட்கிறான். தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுள வோ?அளிகாள் ! வண்டுகளுக்கு எல்லா வகையான மலர்களும் தெரியும். அவைகளின் மணமும் அந்த வண்டுகளுக்கு நன்றாகத் தெரியும். மணத்தைத் தேறும் திறத்தில் சிறந்திருக்கும் வண்டுகளாதலின், அவற்றைப் பார்த்துக் கேட்கிறான். எதேனும் ஒரு வண்டைக் கேட்டால் அந்த வண்டு, எனக் குத் தெரியாது” என்று சொல்லிவிடலாம், வண்டுக் கூட் டம் முழுவதையுமே கண்டு கேட்டு விடலாமே என்று கேட்கிறான். - அவை என்ன சொல்லப் போகின் றன? இங்கே உள்ள வண்டுகள் என்ன, உலகிலுள்ள வண்டுகளை யெல்லாம் கூட்டி வைத்தும் கேட்கலாம். அவை சொல்லும் விடை யைப்பற்றி அவனுக்கு ஐயமே இல்லை. "இப்படி மணங் கமழும் ஆம்பல் ஒன்றையும் பார்க்கவில்லை" என்று தான் அவை சொல்லும். இதைப் போன்ற தோற்றமுள்ள ஆம்பல் பூ இருக்கலாம். ஆனால் இந்த இதழின் மணம் வீசுகின்ற இதழையுடைய ஒரு மலர் உலகத்திலேயே இல்லை என்பது அவனுடைய முடிபு. ஆதலினால், அவன் கேட்ட கேள்விக்கு விடையும் குறிப்பாகப் புலப்படுகிறது. * '* தீங்கனி வாய் கமழும் - ஆம்பலம் போது உலகத்தில் யாண்டும் இல்லை” என்பது தான் அவன் குறிப்பு. அப்படிச் சொல்லாமல்,, உளவோ என்று வண்டுகளைக் கேட்கிற மாதிரி கேட்கிறான், அவனுக்குக் கேள்வி கேட்பதில்