பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#20


நிறம் அவளது மேனியில் பட்டுப் பிரதிபலித்தது அழகு சேர்த்துக் கொண்டிருந்தது,


மாமல்லன் வாடகைக்காருக்கு துட்டு கொடுத்து விட்டு விசையுடன் உள்ளே வந்தான் பூங்கரம் பிணைத்து அழைத்துச் சென்றான். முதன் முதலில் இங்கிருந்து குழப்பங்களுடன் அரியலூருக்கும் பதப்பட்ட ஞாபகம் வந்தது. கண்ட கனவு பலித்தது மனத்தில் எழுதிப் பார்த்துக் களித்த அதே சித்திரப்பாவை தன் இல்லத்தரசி யாக வாய்த்து விட்டதை எண்ணியபோது, அவன் மெய்மறந்தான் .


மாமல்லன் நீண்ட இடைவேளை கழித்து அலுவலகத் திற்குச் சென்றான். சென்றவுடன், அவனுக்கு ஏராளமான நல்வாழ்த்துக்கள் கிடைத்தன திருமணம் முடிந்த கையோடு எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து முன்பே கடிதங்கள் எழுதி விட்டான். வாழ்ந்து காட்டிய வர்கள் ஆசி கூறினார்கள், வாழ வேண்டியவர்களில் மாமல்லனை விட வயதில் மூத்தவர்கள் சிலர் வாழ்த்துரை நல்கினார்கள், இளையவர்களிலே மூன்று நான்கு பேர் ஆளும் முன்னவர்களின் அடித்தளத்தை மிதித்தார்கள், இப்பொழுது இரண்டாந் தடவையாக அவர்கள் அனை வருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியவன் ஆனால் அவன்,


‘ரெமிங்க்டன் இயந்திரமும், சுழல், விசிறியும், அவனுடைய உழைப்பை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்த ‘பைல்'களும் முன்பெல்லாம் அவனுக்கு மலைப்பாகத் தோன்றும். ஆனால் அன்றைக்கு அவை அவனுடைய உற்சாகத்தைத் தூண்டி விட்டன. மந்தமான பழைய நிலையும் குழப்பம் மண்டிய பயமும் தோல் உரிக்கப் பெற்றன. புதிய ஆர்வம் தழைத்தது, முகத்தில் கொழுமை நிறைந்தது.