பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4


விளித்த குரல் துண்டாக நின்றது. விடுக்கப் போகும் வினாவுக்கு விடை என்ன சொல்வதென்று யோசிக்குமுன், அன்னையின் ஆதுரம் என்னவாயிருக்குமென்ற சிந்தனை அவனைத் தன்வயப்படுத்தியது. சூன்யவொளியை மென்று விழுங்கி ஏப்பமிட்ட மெளனத்தைத் துண்டாட எண்ணி இதழ் விட்டு இதழ் பிரித்தான் தனயன், மூப்பெய்திய அன்னையின் இதயம் விம்மலை எதிரொலித்துக் காட்டியது. அவன் துடித்தான், துவண்டான். திகைத்தான், திக்குமுக் காடினான்.


‘அம்மா,’’


‘ஒண்ணுமில்லே, தம்பி அமைதியாயிரு! - ம் . உன் அப்பா உன் கலியாணத்தைக் காண முடியலையேன்னு நினைச்சேன். என்னையே மறந்திட்டேன், அவ்வளவு தான்!”


இளைஞன் தேம்பினான், மூதாட்டி ஆறுதல் சொன்னாள்.


மாமல்லா, என் தமயனார் அரியலூரிலேயிருந்து லெட்டர் போட்டிருக்காங்க. உன் ஜாதகத்தையும் உன் மாமன் மகள் மேகலை ஜாதகத்தையும் ஜோஸ்யர்கிட்டே கொடுத்திருக்காங்களாம். அநேகமா இன்னும் நாலு நாளிலே தகவல் எழுதுவாங்க’ என்று விளக்கம் தந்தாள் கோசலை அம்மாள்.


கை நொடிப் பொழுது மாமல்லன் சிந்தனையின் பிடிக்குள் அகப்பட்டு விழித்தான்.


தனக்குத் திருமணம் என்று வீட்டில் செய்தி சொல்லக் கேட்டவுடன் தான், முதன் முதலில் பெண்ணுக்கு வெட்கம் புறப்படுமாம், அறிந்தவர்கள் சொல்லுவார்கள். அதே நிலை ஆணுக்கும், ஏன் பொருந்தாது? .. இதோ, மாமல்லன்