பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5


இருக்கிறானே! ஏதோ ஒரு தமிழ்த் திரைப்படத்தில் கண்ட கதாநாயகியின் நிலை ஞாபகத்துக்கு வந்தது. வலது காற் பெருவிரல் தரையில் கோலம் போட படாதபாடு பட்டது. முகத்திரையில் வெட்கத்தின் கோடுகள் இருந்தன. ஆனால் தரையில் கோலத்தின் இழைகள் பின்னப்படவில்லை. காரணம் அது சிமெண்டுத்தரை.


கோசலை அம்மாள் மைந்தன் மீது ஏவிவிட்ட அன்பு நோக்கை விலக்கவில்லை. வெட்டவில்லை. அவள் தன்னுள்


சிரித்துக் கொண்டாள். நல்ல மாமல்லன், ! நல்ல வெட்கம்! ... எனக்கு ஒரு மகள் இருந்தால், தன் கல்யாணச் சேதிகேட்டு இப்படித்தான் வெட்கப்பட்டிருப்பாள்.


ஈஸ்வரா!” என்று வேண்டாத நினைவுக்கு வெற்றிலை பாக்கு வைத்தாள் அவள். தன் மகனின் கல்யாணம் பற்றிய இன்பக்கனவில் திளைத்தவாறு அப்படியே நின்றாள். அப்போது மல்லிகேஸ்வரர் கோயிலிலிருந்து மணியோசை கிளம்பி வந்தது. நல்ல நிமித்தம்... !


‘ஆண்டவனே’ - அவள் கண்கள் நீர் சேர்த்தன.


  • நான் மாடிக்குப் போறேன், அம்மா.”


  • நல்லது. தம்பி.’


பிறை நிலவு தன் புகழைப் பறைசாற்றிக் கொண் டிருந்தது, கள்ளும் காரிகையும் மட்டும் போதைப் பொருள் களல்ல. புகழும் முன் சொன்ன இரண்டுடன் மூன்றாவதாக இடம் பெறும். புகழ் இந்த மூன்றே மூன்று முத்துக்களுக்குள் சரித்திரமே அடங்கியுள்ளது, காலத்தின் கதைக்குக் கூட இதுவேதான் கல்லறை சமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்நிலையிலே, பிறை மாத்திரம் எங்ஙனம் ஒதுங்கி நிற்க முடியும் ?