பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46


தம்ளர் பாலும், தட்டு வெற்றிலையும் பொல்லாத இரவுக்கு பொழிப்புரை சொல்லிக் கொண்டிருந்தன.


“மேகலை, இன்று நான் வெளிக் கூடத்தில்தான் படுத்துக் கொள்ளப் போகிறேன், அம்மாவைப் பின்கட்டில் உறங்கச் சொல். நீ வழக்கம் போல உன் படுக்கையறையில் தூங்கு குலோத்துங்கன் என் அறையிலேயே இரவுப் பொழுதைக் கழிக்கட்டும். நீ போ. எனக்குத் தனிப்பட்டு அவசரமான சில அலுவல்கள் இருக்கின்றன. இன்று இரவுப் பொழுதுக்குள் அதை முடித்துவிட வேண்டும் ‘


“எதை ? . ன் ரன் வினவவில்லை ?


மேகலை புறப்பட முயன்றாள். ஸ்டு லுக்கு அழகு செய்தவை, பால், தாம்பூலம்,


மேகலை, நம் ருேந்தினர் மிஸ்டர் குலோத்துங்கன் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என்று கேட்டான்


அவன்,


வினா விடுத்தவனிடமே விடையையும் ஆராய முனை பவள் போல, அவள் அவனுடைய கண்களின் வழியே சென்று திரும்பினாள். அத்தான் ! என்றாள், பயம் தட்டுப்பட்ட குரலுடன். .


  • என்ன மேகலை ??


மாமல்லனுக்குப் பயம் பிடுங்கித் தின்றது. என் கண்களில் என்ன தேடினாள் ? கண்கள் மூலம் இதயத்தைப் புரித்து கொள்ள முடியுமென்று உளநூல் சொல்கிறதே ! இன்று இராப் பொழுதுக்குள் அதை முடித்து விட வேண்டு மென்று பூடகமாய்ச் சொன்னேனே, ஒருகால் எதை என்பதை அறிந்து விட்டனளோ ?...’ என்னும் ஐயப்பாடு தோன்றியது. அவன் ‘ப்பூ!...” என்று அலட்சியமாக இருந்து விட்டான்.