#56
இடைவேளையில் எதுவுமே நிகழாதது போன்றதொரு நினைவின் உணர்வு அவனுடைய ரத்த நாளங்கள் ஒவ் வொன்றிலும் உரைந்தது. குலோத்துங்கனை அவள் வசம் ஒப்படைப்பதாக உறுதி மொழிந்தான் அவன்.
மூவரையும் மணவிழாப் பந்தல் வரவேற்றது.
மணமகன் அவனுடன் உயர்நிலைப் பள்ளியில் வாசித் தவன், அவன் மணவறையில் உட்காருவதற்குள் மாமல்லனையும் உடன் வந்தவர்களையும் உபசரித்தான்.
“இவர்கள்தான் உங்கள்...!”
பூர்த்தி செய்யாமல் மேகலையைச் சுட்டினான் அவன்.
“ஆமாம், மேகலை, என் மனைவி...”
உறவு தீர்மானிக்கப்பட்டதும், கணவனுடன் ஒட்டி நின்றவாறிருந்த மேகலை விலகிக் கொண்டாள்.
‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை !’ என்ற கூக்குரல் தொடரவே, மணமகன் மணவினையில் இ ைன ய வேண்டியவனானான்.
‘ஹல்லோ, மிஸ்டர் மாமல்லன் 1’ என்ற குரல் கேட்டதுதான் தாமதம், அவன் குரல் வந்த பக்கம் தலையைத் திருப்பிவிட்டான்.
“மாதவி !’
‘ஒ. மாதவியா ? .ெ ச ள க் கி ய மா ? கல்யான வீட்டினர் உங்களுக்கும் தெரிந்தவர்கள் போலிருக்கிறது”. என்ன பேசுவது, எதைப் பேசுவதென்று மட்டுப்படாமல் தவித்துத் திண்டாடிய அவன் வாய்க்கு வந்ததைக் கேட்டான். . .