பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3


உணர்வும் தடம் புரண்டது. மேகலையின் மலர்க்கரம் பற்றினான் மாமல்லன். ‘மேகலை அப்படியென்றால், நம் இன்பக் கனவுகள் பாழாகிவிட வேண்டியதுதானா?” என்று கேள்வி கேட்டான். நல்லுணர்வு சிலிர்த்தது. அவன் விலகினான்.


மேகலை பதில் ஏதும் சொல்லவில்லை, முன் தினம் அவனுக்கு அவள் எழுதிய கடிதம் பதில் அனுப்பியது.


கடிதம் : “அத்தான், என்னை காரோ ஒருவரிடம் பிடித்துக் கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். மேகலை உங்கள் நிதி என்பீர்களே ? நிதி உங்களுக்கு வேண்டு மல்லவா ?-- அப்படியென்றால், ஒடி வாருங்கள் “வெண்ணின் வு நீ எனக்கு ‘ என்று வினாடிக்கு வினாடி என்னைப் பார்த்துப் பாட்டுப் பாடுவீர்களே! - நிலவைக் கவ்விச் செல்ல கார்முகிலொன்று காத்திருக்கிறதே, பறந்து வரமாட்டீர்களா ? என் வாழ்வின் நிலையே நீங்கள் தானே, அத்தான் !


- மேகலை.”


சிதைந்த மனத்திலிருந்து சித்த உறுதி கூட ஏற்பட முடியுமா ? ஏன் முடியாது?- நஞ்சம் ஊறும் நெஞ்சத்தில் தானே அமுதிற்கும் வழி கிடைக்கிறது !


    • அக்கா, அக்கா ! நீயும் இவங்களும் ஏன் அழறீங்க?” என்று வினாக் குறியுடன் வினாத் தெரியாச் சிறுமி ஒருத்தி வந்தாள்.


மாமல்லனும் மேகலையும் கண்களை இணையாக்கிப் பார்த்து கொண்டார்கள்.


“தெருவிலேயே நின்னுக்கிட்டிருக்கோமே ! வாங்க உள்ளே’ -