பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அன்பு அலறுகிறது


"அது எப்படி?”

"கொலைகாரன் வாழத் துடிக்கிறான்; அவனுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா? திருடன் வாழத் துடிக்கிறான்; அவனுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா? விட புருஷன் வாழத் துடிக்கிறான்; அவனுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா? விபசாரி வாழத் துடிக்கிறாள்; அவளுக்குக் குறுக்கே உலகம் நிற்காமல் இருக்க முடியுமா?’’

"இருக்க முடியாதுதான்!” என்றாள் அவள். பிறகு "இருந்தால் உலகம் மனிதர்களின் உலகமாயிருக்க முடியாதுதான்!” என்றாள் அவள்.

"அது சரி. நீங்கள் யாரென்று எனக்குச் சொல்லவேயில்லையே?" என்றேன் நான்.

"சொல்கிறேன்; சொல்லத்தானே வந்திருக்கிறேன்!” என்றாள் அவள்.

"சொல்லுங்கள்?"

"நான்தான் சிநேகிதி!"

"சிநேகிதியா?”

"ஆமாம்; தூங்குவதற்கு முன்னால் நீங்கள் படித்துக் கொண்டிருந்தீர்களே, அந்த நாவலில் வரும் சிநேகிதி நான் தான்!”

"தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது எனக்கு, மார்பின்மேல் கிடந்த புத்தகத்தை எடுத்து பரபரப்புடன் பார்த்தேன்; 'சிநேகிதி' என்று அதன்