பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 143 நமக்குக் கண்கள் இருக்கின்றன பார்க்கிருேம். ஒரு விஷயத்தைக் கேட்க மனிதர்களாகிய நமக்குக் காதுகள் இருக்கின்றன கேட்கிருேம். அதுபோலவே ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கவும் கேட்கவும் கண்களும் காதுகளும ஐந்தறிவே படைத்த மிருகங்களுக்கும் இருக்கத்தான் இருக்கின்றன. அவைகளும் அவற்றைக் கொண்டு பார்க்கத்தான் பார்க்கின்றன; கேட்கத்தான் கேட்கின்றன. ஆனல், காந்தா மனிதர்களாகிய நாம் தான் அவற்றைப்பற்றிச் சிக்திக்கிருேம்; சீர்தூக்கிப் பார்க்கிருேம்; இல்லையா! அந்தச் சீர்தூக்கிப் பார்க்கும் திறனை நீயுமா இ ழ ந் து விட்டாய்?’ என்று கத்தினேன். அதைப் பொருட்படுத்தாமல் எங்கள் இருவருக் கும் காபி கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்ற சாம்புவையே அவள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, அட கடவுளே!” என்று என் பக்கம் திரும்பி, இப்பொழுது மட்டுமல்ல, அப்பொழுதே கான் உன்னைப் பற்றிச் சந்தேகித்த துண்டு. ஆல்ை, என் சந்தேகத்துக்கு ஆளான வன் சாம்பு அல்ல; ஒரு காலத்தில் என் காதலுக்கு உரியவராயிருந்த ரீமான் லங்கேஸ்வரன்தான்!” என்ருள்.

  • உன்னுடைய காதலுக்கு மட்டுமா, வேறு எத்தனையோ பேருடைய காதலுக்கு அவர் உரியவரா யிருந்திருக்கிருர். ஆல்ை, அவருடைய காதலுக்குத் தான் எவளும் உரியவளாயிருக்கவில்லை!" என்றேன் கான் ஆத்திரத்துடன்.
உனக்குத் தெரியாது; உன்னைச் சந்திப்பதற்கு முன் ல்ை அவருடைய காதலுக்கு கான் உரியவளாகத் தா ைஇருந்தேன்!" என்று அடித்துச் சென்ள்ை.