பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 அன்பு அலறுகிற து அதுதான் தெரிகிறதே, நாங்கள் வரட்டுமா?” என்று அதனிடம் விடை பெற்றுக் கொண்டு என் கணவர் காரில் ஏறினர்; கானும் அதற்கு டா டா!' சொல்லிவிட்டுக் காரில் ஏறிக் கொண்டேன். வழியில் எங்கள் பேச்சு முழுவதும் என். அத்தானைப் பற்றியதாகவே இருந்தது! சிர்க்கஸ், -கடவுளுக்கு மனிதர்கள் படும் பாடு சர்க்கஸாக இருக்கிறது; மனிதர்களுக்கோ மிருகங்கள் படும் பாடு சர்க்கஸாக இருக்கிறது! அதோ, திரை மறைவிலிருக்கும் முதலாளிக்காக, தின சரித் தொல்லையான வயிற்றுத் தொல்லைக்காக, யாரோ ஒருவன் வாத்திய கோஷத்தால் சிங்கத்தின் உணர்ச்சியை ஊமையாக்கி விட்டு அதன் வாய்க்குள் தலையை விடுகிருனே, அவனைப் பார்த்து ஐயோ, மகனே! என்று கதருமல் மக்களைப் பெற்ற தாய்மார் களால் எப்படி இருக்க முடிகிறது? அதோ, யானையின் முன்னங்கால்களை மார்பில் தாங்கிய வண்ணம் யாரோ ஒருவன் மூச்சு விட முடியாமல் முனகிக் கொண்டிருக்கிருனே, அவனைப் பார்த்து ஐயோ வேண்டாம்!” என்று தடுக்காமல் தமக்கென வாழாத் தந்தைமார்களால் எப்படி இருக்க முடிகிறது?- அட, கடவுளே! பதறிப் பதறித் துடிக்க வேண்டிய அவர்கள் பார்த்துப் பார்த்துப் பரவசமடை கிருர்களே? அவர்களுக்கு இரக்கம் இல்லையா, இதயந் தான் இல்லையா? இதோ, கூண்டுக்குள் புலியை அடைத்துவிட்டு உள்ளத்தில் பயத்துடனும், உதட்டில் புன்ன கை