30 அன்பு அலறுகிறது தெரியாமல் காக்க முயன்றதுதான் என்னை என்னவோ செய்வது போலிருந்தது! இவள் இப்படியிருக்க, என் கணவரோ இதற்கு கேர் விரோதமாயிருந்தார். அடிக்கடி யாராவது ஒருவரை அவர் அழைத்து வந்து, அவருடைய அருமை பெருமைகளைப் பற்றியெல்லாம் என்னிடம் ஆதியோடந்தமாகச் சொல்லி, அதுவரை அவர் கல்யாணம் செய்துகொள்ளாமலிருப்பதற்குக் கார னங்கள் என்னென்ன உண்டோ, அவற்றையெல்லாம் ஒன்று விடாமல் எனக்கு விளக்கி, என்னையும் அவரை யும் ஏதாவது ஒர் ஏகாந்தமான இடத்தில் உட்கார வைத்துவிட்டு மெள்ள கழுவி விடுவார்! வந்தவர் இஞ்சி தின்ற குரங்கைப்போல என்னைப் பார்த்துப் பார்த்து இளிப்பார்; திராட்சைப் பழத்தைக் கண்ட கரியைப்போல என்னைத் தாவித தாவிப் பார்ப்பார். கடுகடுவே என் கணவர் வந்து அன்பைப் பற்றி யும், அன்பை நிலை காட்டுவதற்காக உலகில் அவ தரித்த அவதார புருஷர்களைப் பற்றியும் எங்களிடம் பேசுவார். அத்துடன் கிற்காமல், அந்த அன்பு முற்றி எப்படிக் காதலாக மாறுகிறது என்பதைப் பற்றியும் சாங்கோபாங்கமாக விவரிப்பார். வந்தவர் கதை கேட்க வரவில்லை என்பது அப்போதுதான் தெரியும் எனக்கு. ஏனெனில், மேற்கோள் காட்டு வதற்காக ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வர என் கணவர் எழுந்து சென்ருல்போதும் வந்தவர் சொல்லிக் கொள்ளாமல் கடையைக் கட்டி விடுவார்!
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/82
Appearance