பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 அன்பு அலறுகிறது அவன்-அந்தக் கணவன் ஆண்மை இழந்தவகை இருக்கலாம்; அவனுடைய இதயத்தில் பேடித்தனம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் ஆண்மையுள்ள வனேயானுலும் பேடி தான்; ஆண்மை யற்ற அலிப் பிறவிதான்! அவன்-அந்தக்; கணவன்-குருடனக இருக்க லாம்; அவனுடைய அகக்கண் குருடாய் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அவன் கண்களுடைய வனேயானுலும் குருடன்தான். கண்களற்ற கபோதி தான்! இத்தகைய எண்ணங்கள், சின்னஞ் சிறு பிராயத்திலிருந்தே என் உள்ளத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்ததால், என் கணவன் மீது எந்த கிலையிலும் மாருத அன்பு கொண்டிருந்தேன், கான். அந்த அன்பை-அந்த அருமையான இதயத்தை அவர் தெரியாத்தனத்தாலோ, தெளிவின்மையாலோ, கிராகரித்து, எவனே ஒருவனுக்கு அவர் என்னைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்; போயேவிட்டார். அவருக்கான அர்த்தமற்ற செய்கைக் காகச் சில சமயம் கான் அனுதாபப்பட்டாலும், அட அற்பப் புழுவே!" என்று சிலசமயம் கான் ஆத்திரமும் அடைந்தேன்;-ஆம்; உண்மை-உண்மையிலும் உண்மை! ஒழுக்கத்தைத் திருக்குறளோடு ஒதுக்கிவைத்து விடாமல வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க விரும்பும் ஆண்மை மிக்க ஆண்களும், பெண்மை மிக்க பெண் களும்-கண்களால் பார்த்தாலும் சரி, காதுகளால் கேட்டாலும் சரி,-வெட்கித் தலை குனியும் அளவுக்கு