பக்கம்:அன்பு மாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

17

செம்மையுறு வாழ்வளிக்க நிற்கின்ற செம்மல்
திருவண்ணா மலைதன்னில் ராமசுரத்கு மார்தான்
அம்மையென அப்பனென அருள்செய்தே நிற்பான்;
அவனருளைப் பெற்றார்கள் பெருஞ்செல்வர்அன்றோ? 18

கோல் கணை- நீண்ட அம்பு, பம்மி - பம்பி; பரந்து.

செல்வமெனக் கைப்பொருளை நம்பியே மாந்து
திருடர்க்குப் பறிகொடுத்து மனம்மிகவும் சாம்பிப்
பல்விதமாம் முயற்சிகளில் சென்றுதடு மாறிப்
பாரில்நின்ற வாழ்வெல்லாம் வீணாகப் போக்கி
அல்லலுற வேண்டாம்:மெய்ஞ் ஞானத்தை அடைய
ஆரருளை மிகஅடைய வழிசொல்வேன் கேட்பீர்;
மல்லலுறும் அருணைநகர் ராமசுரத்கு மார்தான்
மயக்கமெலாம் தீர்க்கின்றான்; சென்றடைமின் சரணே!

சாம்பி - வாடி, மல்லல் - வளம்.

சரணமென வந்தவர்கள் தமக்கெல்லாம் அருளைச்
சார்த்துகின்ற யோகிஇவன் திருவருளும் வாழி!
அரணமென விஞ்ஞானப் பகைபாற்றத் தயையை
அருள்கின்ற பெருஞ்சித்தன் இவனருள்தான் வாழி!
கரணமெல்லாம் தவிர்கின்ற மெய்ஞ்ஞான போதக்
காட்சிதரும் ராமசுரத் குமார்நாமம் வாழி!
அருணைநகர் மிகவாழி! அதிற்சுடரும் தெய்வ
அருள்வாழி! உலகமெலாம் வாழிமிக வாழி! 20

அரணம் - பாதுகாப்பு, பாற்ற - அழிக்க,

(8-1-79)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பங்கமார் மாயை தன்னில்
பட்டுழல் மாந்தர்க் கெல்லாம்
சங்கடம் தீர்க்கும் செய்தி.
சாற்றுவான், அருணை தன்னில்

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/23&oldid=1303308" இலிருந்து மீள்விக்கப்பட்டது