பக்கம்:அன்பு மாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அன்பு மாலை

தஞ்சமென் றடைவார் பாலே
சார்ந்திடு துயரைப் போக்கித்
துஞ்சுதல் இல்லா ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!

33

துஞ்சுதல் - இறத்தல்.

வீடுற வேண்டு வார்கள்
மெய்ம்மையாம் நெறியைக் கண்டு
காடுறல் போக்கி நெஞ்சக்
கருத்தொன்றி நிற்றல் வேண்டும்;
மாடுறு செல்வந் தன்னை
மதிக்கின்றீர் இங்கே வம்மின்;
சூடுகள் போக்கும் ராம
சுரத்குமார் அடியைத் தாழ்மின்.

34


வீடு - முத்தி, மாடுறு செல்லம்- தம் பக்கத்தில் உள்ள செல்வம், சூடுகள்- தாபத் திரயங்கள்.


பல்லெலாம் தெரியக் காட்டிப்
பரிந்திரு கைகள் நீட்டி
மல்லலார் செல்வர் பாலே
வருந்தியே இரத்தல் வேண்டாம்;
கல்லெலாம் நெகிழச் செய்யும்
கருணையன் பாலே வம்மின்;
தொல்லைதீர்க் கின்ற ராம
சுரத்குமார் பாதம் தாழ்மின்.

35


மல்லல் - செல்வவளம்.


கண்ணென நிற்பான்;கண்ணில்
கருவிழி யாகி நிற்பான்:
எண்ணென நிற்பான்; எண்மேல்
எழுத்ததைச் சொல்வான்;என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/28&oldid=1303404" இலிருந்து மீள்விக்கப்பட்டது