பக்கம்:அன்பு மாலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

25

அயர்வுறு கின்ற காலை
அருங்குரு வாகி நிற்பான்,
துயர்தவிர்க் கின்ற ராம
சுரத்குமார் அடியைச் சார்மின்.

42


மயர்வு - மயக்கம். மகிதலத்தில் - பூமியில்,


கணையெனும் பூக்கள் ஐந்தால்
காமன்செய் போரில் வெற்றி
அணைவுறல் வேண்டும் என்னின்
அவன்பதம் அடைவீர்; என்றும்
பிணைதவிர் கின்ற சீர்கொள்
பெரியவன். ஞான யோகி
துணைதவிர் கின்ற ராம
சுரத்குமார் அடியைச் சார்மின்.

43


கணை - அம்பு, பிணை - கட்டு; பாசம். துணை - ஒப்பு.


எக்கணும் நிறைந்தே ஈசன்
இருக்கின்றான் என்பார் பல்லோர்;
மிக்கபேர் சொலினும் அன்னோன்
விளக்கமாய்த் தெரிவான் அல்லன்;
தொக்கது பொய்யே என்பார்;
தூயஅண் ணாம லைக்கண்
துக்கம்தீர்க் கின்ற ராம
சுரத்குமார் தம்பால் வம்மின்.

44

எக்கணும்- எவ்விடத்தும்.

மாசுறு வாழ்க்கை யெல்லாம்
மன்னிய நிலைய தென்றே
பேசுவீர், செயல்கள் செய்வீர்,
பின்னமாம் புகழைச் சேர்ப்பீர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/31&oldid=1303411" இலிருந்து மீள்விக்கப்பட்டது