பக்கம்:அன்பு மாலை.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


等0 அன்பு மாலை

காண்பரிய சோதியாய் மறைதனக்கும் அரிதாய்க்

காணுகின்றபொருளுக்கும்காண்பதற்கும் அரிதாய்ப் பூணுகின்ற மோனநிலை தன்னிலே நிற்பார்

பொற்புறவே அறிகின்ற பெரும்பொருளே ஆகி நானுகின்ருேர் தமக்கரிதாய் நல்லோர்கள் தேசாய் ஞானமுறும் பீடமாய் இருக்கின்ற பொருளைத் தாணுவென நந்த மக்குக் காட்டுகின்ற நம்பன்

சார்ராம சுரத் குமார் யோகியெனும் ஞானி. 置盛爱

மறை - வேதம். தேசாய் - சோதியாய். தானு - சிவபெருமான்.

கல்லாதார் வந்தாலும் கற்றவர்கள் வரினும்

காதலுடன் குழந்தைபோல் வரவேற்றே சிரிப்பான்; அல்லார்கள் ஆலுைம் வல்லவர்கள் எனினும் - அவர்க்கெல்லாம் பேரருளை ஈந்து நலம் தருவான்; சில் ஐயம் உளத்தகத்தே இருக்கின்ற காலத்

திகழுமவன் திருமுன்னர் நின்ருலே போகும்: ; புல்லர்கள் அறியாத பெருமையுள ஞானி

பொற்புடைய ராமசுரத் குமாரென்னும் ஐயன். 123

சில் ஐயம் - சில சந்தேகங்கள். புல்லர்கள் - இழிந்தவர்கள்.

உலகெல்லாம் ஒருபொருளே இயங்குகின்ற தென்பது

ஒர்மின் என எந்நாளும் சொல்லிநமை உய்ப்பான் பலகலையும் கற்றேர்கள் வருவார்கள், பணிவார்;

பாமரர்கள் அவன்பாலே மிகப்பத்தி செய்வார்: கலகமிடும் சமயமெலாம் அவன் முன்னே சென்ருல்

காளுமே பட்டொழியும், சாந்திவரும் அங்கே: அலகிலதாம் பெரும்புகழ்சேர் அருணநகர் தன்னில்

அருள்செய்யும் ராமசுரத் குமார்தன்னைப் பணிமின்.

ஒர்மின் - சிந்தியுங்கள். உய்ப்பான்-நடத்துவான். அலகு அளவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/56&oldid=535577" இருந்து மீள்விக்கப்பட்டது