பக்கம்:அன்பு மாலை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 அன்பு மாலை

மணமாரும் மலரினிலே வண்ண மெலாம் ஆகி

மணத்துக்குள் அநுபவிக்கும் இன்பநலம் ஆகிக் குணமாகிக் குணத்தினுக்கோர் சீகரமும் ஆகிக்

கூர்கின்ற இன்பத்துள் இன்பமே ஆகி எணமெல்லாம் போக்குகின்ற உபசாந்தி ஆகி ஏறுகின்ற ஏற்றமெலாம் தன்னுருவம் ஆகி நிணம்மாரு உடல்கொண்டான் ராமசுரத் யோகி;

நினைப்பார்கள் உள்ளத்தே அமுதம்தந் திடுவான். 185

கூர்கின்ற மிருகின்ற, நினம் - ஊன்.

யார்கண்டார், உலகத்தில் எங்கிருப்பான் ஞானி

என்றேதான் பலர் சொல்வார்; இவ்விடத்தே வந்து நேர்கண்டு பார்த்திடலாம்; திருவருணை தன்னில் நிலவுகின்ற ராமசுரத் குமாரிடத்தே சென்ருல் பார்ஒன்றும் ஒருஞானம் பலித்ததெனக் கண்டே

பாங்குடனே அவன்சிரிப்பில் மயங்கிவிடு வார்கள்: ஊர்கண்ட மெய்இதுவாம்: உலகமெலாம் கண்டே

உவக்கின்ற உண்மையிதைக் கண்டேநீர் வம்மின். 136

தழல்கண்டால் ஒளியிருக்கும்; தழலைத்தான் தீண்டில்

தன்கையைச் சுட்டுவிடும்; அதுபோல ஞானி தொழல்கண்டால் நலமாகும்: குறும்புதனைச்செய்தால்

துயர் மிகவே ஆகும்; இதைக் கண்டிடலாம் இங்கே: விழல்கண்டு மனமுருகி வருகின்றர் தமக்கு

மேன்மையுற நல்லுரைகள் சொல்கின்ருன் அன்றே: அழல்கண்டால் தேற்றுகின்ருன் ராமசுரத் குமாராம்

அவன்கண்டீர் பெருஞானி; இது திண்ணம் திண்ணம்.

தழல் - நெருப்பு. தொழில்கண்டால் - தொழுதால். விழல் - வணங்குதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/60&oldid=535581" இருந்து மீள்விக்கப்பட்டது