பக்கம்:அன்பு மாலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை

73

காலன் வந்தால் மிகஅஞ்சிக்
கண்ணிர் ததும்ப நிற்கின்றோம்;
சீலன் இவன்பால் அன்புசெயின்
சிக்கல் தீர வழிபிறக்கும்;
கோலும் ராம சுரத்குமார்
குளிர்தாள் பணிமின்;அருணையிலே
சாலும் அன்பர் வணங்குகின்ற

தயவார் அண்ணல் இருப்பானே.
198


அண்ணா மலையில் கோபுரம்போல்
அதன்பின் மலைபோல் தவமலையாய்
நண்ணா தாரும் பணிகின்ற
நயத்தைக் காட்டி இருக்கின்றான்;
திண்ணார் நெஞ்சம் கொண்டபிரான்,
சீலம் மிகவும் உடைய அண்ணல்,
செண்ணார் ராம சுரத்குமார்.

சிவயோ கத்தின் செல்வமே,
199


நண்ணாதாரும் - பகைவர்களும். செண் - செம்மை.

மோனம் என்னும் இராச்சியத்தின்
முழுதாம் உரிமை படைக்கின்றான்:
ஞானம்என்னும் பெருநிலத்தில்
நல்ல அரசாய் இருக்கின்றான்;
தீனர் வந்தால் அவர்தம்மைத்
திகழ உயர்த்தி விடுகின்றான்:
ஆன அருளான் ராமசுரத்
குமாராம் அரிய யோகியரோ.

200
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/79&oldid=1303387" இலிருந்து மீள்விக்கப்பட்டது