பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

101


உலகத்தில் உள்ள மற்ற எல்லாச் சமயங்களிலும் முற்றிலும் வேறுபட்டதாகக் கிறித்தவ சமயத்தை வேறுபடுத்திக் காட்டுவது, கிறித்தவராகிய அனைவரும் பெற்றிருக்கிறது கடவுளின் அன்பியல்பே. கிறித்தவம் என்பது ஒரு மதம் அன்று! மாந்தருள் அன்பின் இயல்பு நிரப்பப்பட்டிருப்பதாம்.

மாந்தன், அத்தகு அன்பின் இயல்பின் உச்ச நிலைக்கு உயர்கிறான்; உலகில், உள்ள மக்கள் போன்று பொதுவான வாழ்வியலில் இருந்து தந்தையின் அருட்பேருலகினுக் துக்கிவிடுகிறது - கடவுளின் அன்பியல்பு. எடுத்துக்காட் உலகில் இயேசுவுக்கும் மற்ற மாந்த இனத்தில் உள்ள மாந்தனுக்கு இடையில் இருக்கின்ற வேறுபாட்டினைப்போல நம்மையும மற்றவரிடத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது அவ் அன்பின் இயல்பு, அன்புப்பண்பு!

கடவுளின் அன்புப்பண்பு, அன்பியல்புதான்் அனைத்துப் பண்பிற்கும் உள்ளமாக இருப்பது என்பதை அறிந்திருந்தும் அதனைக் கிறித்தவ மக்களுக்குச் சரியாக எடுத்துச் சொல்லவில்லை, திருச்சபைகள்!

இயேசு, புதிய படைப்பின் தலைவர் ஆவார். அந்தப் புதிய படைப்பினை ஆட்சி செய்திட, நமக்கு அன்பென்னும் சட்டத்தை இயேசு அளித்துள்ளார்.

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பு கூருங்கள். அதனால், உலகில் உள்ள மாந்தர் அனைவரும் நீங்கள் என்னுடைய தொண்டர்கள் என்பதை அறிவார்கள்”

இந்தப் புதிய அன்புக் கட்டளையைப் புதிய அன்புச் சட்டம் தான் நம்மை ஆளவேண்டியது.

இயேசு அன்பிறைவன்! அவரே, புதிய படைப்பின் இறைவன் ஆவார்.

"உங்களுக்கு நான் புதிய கற்பனையைத் தருகிறேன்; அதனைக் கைக் கொள்ளுங்கள், உங்களில் ஒருவர் மற்றொருவரில் அன்பு கூருங்கள் அதனால் உலக மக்கள் உங்களை என் அன்பர்கள் என்று கண்டறிவார்கள்."

இந்த மறைமொழிச் சொற்கள், புதுபடைப்பினை அறிந்து கொள்ள உதவும் சின்னம்: சிறப்புக் குறியீடு (Badge) இது. நம்