பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அன்பு வெள்ளம்


தீக்குறி தோன்றுகிறது. சூறாவளி சுழன்றடித்து அச்சுறுத்துகிறது. இந் நிலையில், அன்பை இழந்ததால் பெறக்கூடிய கடைநாள் தீர்ப்புக் கார் இருளில் போய்ப் பதுங்குகிறோம்.

அன்பின் தோழமைப் பாங்கு நொறுங்கிப் போனதால் ஆழ்ந்த துயரம் வந்துறுவதிலும் அதுவரை நம் நெஞ்சம் பட்டறியாத சாத் துயரம் பட்டறிய வேண்டிய நிலையும் வந்துற்றது பற்றியும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

மனிதரின் வாழ்வே நெஞ்சந்தான். அதுபோல அன்புதான்் நெஞ்சத்தின் நெஞ்சம் - இயக்கம்!

நாகரிகமற்ற கீழ்த்தரமான இடத்திலிருந்தும், ஒரு காதற் காவியத்தைப் படைக்கிறது அன்பு. அருவருக்கத் தக்கனவற்றைக் கூட அணைக்கத்தக்கதாகச் செய்கிறது அன்பு. அன்புக்கு என்றோர் அரும்பெரும் ஒளிச்சுடர் உண்டு. அந்த அன்பு, தன் பேரொளிச் சுடர் வீசி, நம் வாழ்க்கையினை ஒளிமயமாக்குகிறது. அதன் மூலம் நம் வாழ்வில் உற்ற துன்பங்கள் துயரங்கள் மடியவும் மறையவும் செய்கிறது அன்பு.

வீணாகிப் போன வாழ்க்கையிலிருக்கும் மாந்தரை மீட்டு, அழகிய - மற்றவர்க்கும் பயனுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்துக் காட்டுவது அன்பு.

அன்பு என்பது ஒர் ஒப்பற்ற உயிர்ப்பாற்றல்; தெய்வ மெய்ப்பொருள்; உயிர் உண்மையம்; காரண காரியங்களை எஞ்சியும் விஞ்சியும் நிற்பது. காரண காரிய எல்லைக்குள் அடங்குவதன்று அன்பு. அவ் அன்பே மாந்தருள் உரிமையோடு உள் நின்று ஓங்கி நிலைக்கும் இறைமை ஆகும்!

இறைமைக்குக் கிடைத்த விடை - அன்பின் உறவு

ன்பின் வழி என்பது, அன்பு நெறியில் நடப்பது ஆகும். அன்பு வாழ்க்கை என்பது புதிய உடன்படிக்கையின் நெறியில் வாழ்வது ஆகும். -

அன்பு நெறி பிறழ்ந்து அடியெடுத்து நடந்தோம் என்றால் அது, இயற்கையின் போக்கிற்கு மாறுபட்ட நெறியில் நடிக்கிறோம் என்று பொருள். எவ்வெப்போது நாம் அன்புக்கு மாறுப்பட்டு செயல்படுகிறோமோ அவ்வப்போதெல்லாம் நாம்.இறைமையின் போக்கிற்கு மாறுப்பட்டுச் செயல்படுகிறோம் என்று ,ெஒருள்.