பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

23


ஆனால் நாம் மேற்கண்ட காட்சியினை நினைவுத் திரையிலிட்டுக் கண்டதனைச் சற்றே ஆய்ந்து பார்த்தால் ஒர் உண்மை விளங்கும்.

இயேசு இவ் உலகத்தைத் தம் திருவருள்மொழியால் ஆண்டுகொண்டார். தமது அளப்பரும் துயரங்களால் - பாடுகளால், உலகில் தாம் ஆற்றிட வேண்டிய அத்துணைப் பணிகளையும் ஆற்றிய பின்பு, வானுலகில் மாட்சிமை மிகும் கடவுளின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டிய இயேசு, ஒருகணம் அந்த மேநிலையை விடுத்து, உலகில் தம் தொண்டர்களாக விளங்கிய மீனவர்கள் கடுங்குளிரினையும் கடும் பசியினையும் போக்கிட அந்தக் காலைப்பொழுதில் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார் என்றால் என்னவென்பது?

அவர் உலகில், அன்று ஆங்கே தோன்றி அவர்களுக்காக உணவு சமைத்துப் படைத்திட்டது ஏன் என்பதை ஆராய்ந்தால் நமக்கு ஒன்று புலனாகும். புலனாக வைக்கிறார் இயேசு அன்பு, அறம் (Love-charity) என்னும் இருவேறு சொற்களும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறு பொருள் கொண்டது என்பதனை நமக்கு அறிவுறுத்தவே, தம் மன்பதை அன்புப்பணியின் வாயிலாக விளக்கிடவே, இயேசு அக் காலைப் பொழுதில் கடுங்குளிரில் தொண்டர்களான மீனவர்களுடைய கடும்பசியைப் போக்கிட அவ்வாறு சமைத்துக் கொண்டிருந்தார் , உணவு படைத்தார்.

அவர்கள் இயேசு படைத்த அப்பத்தையும் மீனையும் உண்டபின்பு, இயேசு, சீமோன் பேதுருவை நோக்கி, "யோனாவின் குமாரானகிய சிமோனே! இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாக இருக்கிறாயா? என்றார். அதற்கு அவன், “ஆம் ஆண்டவரே! உம்மை அன்புடன் விரும்புகிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றான். அவன் மொழியில் 'விரும்புகிறேன்' என்பதற்குப் "பிலியோ' (Phileo) எனும் சொல்லினைப் பயன் படுத்தினான்.

இரண்டாம் முறையாக அவர், அவனை நோக்கி, "யோனா வின் குமரானாகிய சிமோனே, நீ என்னிடத்தில் அன்பா யிருக்கிறாயா? என்றார்.

'அன்பு' (Phileo) என்னும் சொல்லுக்கு மாறாக 'அகாபா' (Agapa) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்.