பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

25


இயேசுவிடம் விளங்கிய அன்பு

ம்மில் ஒங்கும் அன்பின் அளவினைப் பொறுத்துத்தான்் நம் சமூகத்தில் நமக்குள்ள இடமும் மதிப்பும். இந்த நிலையில் நாம் நமது அன்பினைப் பற்றிய மதிப்பீடு செய்யும் எண்ணம் நமக்கு இல்லாமலே இருந்திருக்கிறோம்.

இன்றைய நிலையில் சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற ஒருவர், அவருடைய செல்வம் அல்லது அரசியல் செல்வாக்கின் நிலையைப் பொறுத்துத்தான்் மதிக்கப்படுகிறது. அதுவும் ஒருவருடைய செல்வம் - அரசியல் செல்வாக்கினைப் பொறுத்தே, அவரை மதிக்கப்படும் அளவும் இருக்கும் என்கிற சிக்கலும் இல்லாமல் இல்லை. கடைசியாக ஆய்ந்து பார்க்கும்போது, செல்வம் உள்ளவர்களோ அரசியல் செல்வாக்கு உள்ளவர்களோ பெறும் மதிப்பு, வெறும் மதிப்பு, வீண் மதிப்பு, பயன் விளையா மதிப்பு. ஆனால் மாந்தருள் எவர் மற்றவரை அன்புடன் நேசிக்கின்றாரோ அந்த மாந்தர்தாம் சமுதாயத்திற்கு உதவிபுரிந்து வருபவராக மதித்துப் போற்றப் படுகின்றனர்.

எல்லாம் வல்ல கடவுளின் உள்ளொலி கேட்டு, அதன்படி மன்னுயிர்க்கு அன்பு செய்து வாழும் பொருட்டுத்தான்் அன்பின் வழி மாந்தர் படைக்கப் பெற்றனர்.

அன்புக்குப் புறம்பே உள்ளவர் எத்தகையவராயினும், அவர்கள் வாழ்வில் எத்தகைய வெற்றியும் பெறாதவர்கள் என்றே உறுதியாகச் சொல்லலாம்

தன்னலம் என்பது மாந்தனை அழிக்கும் பழிப்புக்கேடு. மாந்தரின் தன்னலத்தைத் துடைத்தெறிகிறது அன்பு.

மாந்தர் வாழும் இல்லத்தையும், இல்லறம் ஒங்கும் அவ் இல்லத்தை விளங்க வைக்கும் திருச்சபையினையும் அழிவு ஏற்படாவண்ணம் பேணிக் காக்கிறது அன்பு.

அன்புடையவர், துருப்பிடிக்காத எஃகினைப் போன்றவர். எஃகின் பெரும்பகுதி துருபிடித்தே தேய்ந்தழிந்து போகிறது என்பது நமக்குத் தெரியும். அதே போன்று இந்திய நாட்டிலும் வேறுநாடுகளிலும் பெரும்பான்மை மக்களின் வாழ்வறம் - இல்லற வாழ்வோங்கும் இல்லங்கள் எல்லாம் தன்னலத்தாலேயே அழிந்து போகின்றன. இருவர்க்கிடையே நடைபெற வேண்டிய திருமணம் கூட நடைபெறாமல், சீர்குலைந்து போவதற்கும் தன்னலமே காரணம்.